அநுராதபுர பள்ளிவாசல் தகர்ப்பு [Photos]

இப் பள்ளிவாசல் இதற்கு முன்னர் பல தடவைகள் இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த நிலையிலேயே நேற்று மாநகர சபையினால் அகற்றப்பட்டுள்ளது.

கடந்த வருடம் தாக்குதல் நடத்தப்பட்டதிலிருந்து இப் பள்ளிவாசலின் இருப்பு தொடர்பில் சர்ச்சை நீடித்துக் கொண்டே வந்தது.  இருப்பினும் குறித்த பள்ளிவாசல் மீது எவரும் தாக்குதல் நடத்த இடமளிக்கக் கூடாது எனவும் உரிய பாதுகாப்பு வழங்குமாறும் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து பிரதேசத்தின் அமைதி கருதி இப்பள்ளிவாசலை நிர்வாகம் மூடியிருந்தது. எனினும் பிரதேச முஸ்லிம்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் திறக்கப்பட்டு வணக்க வழிபாடுகள் நடைபெற்று வந்தன. கடந்த ரமழான் மாத்திலும் இப் பள்ளிவாசலில் சகல அமல்களும் தொடர்ச்சியாக இடம்பெற்றன.

இந்நிலையிலேயே நேற்று மாநகர சபையினால் இப் பள்ளிவாசல் உடைத்து அகற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அநுராதபுரம் மத்திய நுவாரகம் கிழக்கு பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த பள்ளிவாசல் விடயத்தை அநுராதபுரம் மாநகர சபையே கையாள்வதாக குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் மாநகர ஆணையாளரை சந்தித்த பிரதேச முஸ்லிம்கள் தமக்கு மாற்று ஏற்பாடு செய்து வரும்வரை குறித்த பள்ளிவாசலை அகற்ற வேண்டாம் என வேண்டுகோள்விடுத்திருந்தனர்.

கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி இப் பள்ளிவாசல் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினரால் தாக்கப்பட்டது. அச் சமயம் மூன்று மாதங்களுக்குள் இப் பள்ளிவாசலை அகற்ற வேண்டும் என தாக்குதல்தாரர்கள் காலக்கெடு விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  தக்கியா பள்ளிவாசல் நேற்று மாலை 4.00 மணியளவில் நகரசபையினால் முழுமையாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாய் இயங்கி வரும் இப்பள்ளி வாசலை அண்டி சுமார் 40 முஸ்லிம் குடும்பங்கள் வாழுகின்றனர். பன்சலைக்கு பக்கத்தில் இப்பள்ளி வாசல் அமைந்துள்ளதால் இதனை அகற்றுமாறு கோரி பலவிடுத்தம் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்ததன் எதிர் வினையாகவே இப்பள்ளி வாசல் தகர்ப்பு இடம்பெற்றுள்ளது.

பெரிய பள்ளி வாசல் நிர்வாகத்திற்குத் தெரியாமல் பள்ளி தலைவரின் தனிப்பட்ட அனுமதி கடிதத்தைப் பெற்றே இறை ஆலய இடிப்பு நடந்துள்ளதாக பெரிய பள்ளிவாசலின் காரியதரிசி பாரூக் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு தெரிவித்தார்.

தம்புள்ளை பள்ளியில் ஆரம்பித்து மல்வத்து ஓயா பள்ளி வரை 25 பள்ளிவாசல்கள் இனவாதிகளினால் தாக்கப்பட்டுள்ளமை முஸ்லிம்களின் கையாலாகாத் தன்மையையே வெளிக்காட்டுகின்றது. அத்தோடு, முஸ்லிம் சமுதாயத்தின் வழிகாட்டிகள் என்று தம்மை தம்பட்டமடிக்கும் ஜம்இய்யதுல் உலமாவும் இஸ்லாமிய இயக்கங்களும் வாய்பொத்தி நிற்பதோடு மட்டுமன்றி, இனவாதிகளினதும், அரச அதிகாரிகளினதும் அழுத்தங்களுக்கு அஞ்சியும் முஸ்லிம்களின் ஒவ்வொரு உரிமையாக தாரை வார்த்து வருவதன் விளைவே தொடர்ந்தேர்ச்சியாக அரங்கேற்றப்படும் இறை இல்ல இடிப்பாகும்.

கிரேண்ட பாஸ் பள்ளி வாசலை விட்டுக்கொடுத்து அதன் பரபரப்பு தணிவதற்குள் முஸ்லிம்களின் 25ஆவது மஸ்ஜிதும் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளமையும், வழமை போன்று முஸ்லிம் பெயர் தாங்கித் தலைமைகளே இதற்கு துணை போய் உள்ளமையும் எமது உம்மத்தின் அவலத்தையே சுட்டிக்காட்டுகிறது.

p1-595x446

p2-595x446

p3-595x446

p4-595x446

p5-595x446

p6-595x446

Photo: Ceylonmuslim.com

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *