அனைத்து ஊடகங்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் அரனாயக்க வில்பொலை அல் மனார் ஜும்ஆ பள்ளிவாசல்

IMG-20160714-WA0013 (1)

அரனாயக்க மண்சரிவு அனர்த்தத்தின் போது மக்கள் பிரச்சினைகளை உடன் உலகுக்கு எடுத்துச் சென்ற ஊடகங்களுக்கு அரநாயக்க முஸ்லிம்கள் மற்றும் வில்பொலை அல் மனார் ஜும்ஆ பள்ளிவாசல் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக பரிபாலனசபைத் தலைவர் எம். பர்ஹான் உமர் தெரிவித்தார்.

அரனாயக்க சாமசர மலைப்பாங்கில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தின் போது வில்பொலை அல் மனார் ஜும்ஆ மஸ்ஜித் ஊடகங்களினூடாகவும், இணையதளங்களினூடாகவும் மக்களுக்கு உதவிகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது.

ஊடகங்கள் இந்த செதியை உலகலாவிய ரீதியில் கொண்டுசென்றதால் அல்மானார் ஜும்ஆ மஸ்ஜிதுக்கு பல பிரதேசங்களில் இருந்தும் உதவிகள் வந்து குவிந்ததாகவும் அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை தொடர்ந்தும் மேற்கொள்ள முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக எம்.யூ.பர்ஹான் முஹம்மத் மேலும் தெரிவித்ததாவது,
ஊடகங்கள் உடன் செயற்பட்டதால் எமது மஸ்ஜிதை பல உதவிப்பொருட்கள் வந்தடைந்தது.

பாதிக்கப்பட்ட சகோதர சிங்கள மக்களுக்கு எவ்வித குறையும் இன்றி பொருட்களை பகிர்ந்தளிக்கும் மத்திய நிலையமாகவும் எமது பள்ளிவாசல் செயற்பட்டது.

நாம் இவ்வாறு நிவாரண உதவிகளை மேற்கொண்டதால் பாதிக்கப்பட்ட சகோதர சிங்கள, தமிழ் மக்களிடையே நல்லுறவு மலரவும் காரணமாக அமைந்தது.

எனவே இந்த பணிகளில் முனைப்புடன் செயற்பட்ட ஊடகங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

-Aadhil Ali Sabry-

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *