அன்று மாவனல்லையில் ஜுமுஆ பாதையில் நடத்தப்பட்டது….

இன்று ‪#‎மே‬ 1.

எல்லோருக்கும் ஞாபகம் வருவது தொழிலாளர் தினமும் தல அஜித்தின் பிறற்த நாளும். எங்களுக்கு மறக்க முடியாத நாள் அதுதான் மாவனல்லை கலவரம்.

‪#நாளைக்கு‬ மாவனல்லை கலவரம் நடந்து 14 வருடங்கள் ஆயிற்கு.

மாவனல்லை நகரின் மத்திய பஸ் தரிப்பிடத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் சிங்களவர் ஒருவர் வழமையாக அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வந்தனர். 2001.04.30 அன்று இரவு வேளையில் குறித்த சிற்றுண்டிச்சாலைக்கு வந்த காடையர்கள் சிறு தொகைப் பணத்தை செலுத்தி பணத் தொகையைவிட அதிக மதிப்புள்ள சிகரெட்டுக்களைக் கேட்டுள்ளனர். தரமுடியாது என கடைக்காரர் மறுப்புத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த காடையர்கள் குறித்த கடைக்காரை தாக்கியுள்ளனர்.

“தம்பிலாட்ட புலுவன்னம் மெயாவ பேரகண்டே வரெல்லா” என்று சொல்லி இன்னும் இன்னும் அந்த நபரைக் தாக்கியுள்ளனர். மௌனம் காத்த முஸ்லிம்கள் பொலிஸாரில் முறைப்பாடு செய்தனர்.
பொலிஸாரால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடுத்த நாள் கலை கலவரம் இன்னும் இன்னும் வெடித்தது. மாவனல்லை நகரம் நரகமாக மாறியது.

ஒரு உயிர் அநியாயமாக பலி போனது. 20இற்கு மேட்பட்டோர் காயமடைந்தனர். ஹிங்குள, கனேத்தன்ன, உயன்வத்த. ஹெம்மாதகம, திப்பிட்டிய ஆகிய பகுதிகளிலே அதிக சேதங்கள் ஏற்பட்டது.

ஹிங்குள் ஓயா கனேதன்ன பகுதிகளில் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. சுமார் 80 கடைகள் சேதமாக்கப்பட்டன. 9 வீடுகள் சேதமாக்ப்பட்டதுடன் இதில் முஸ்லிம்களின் 50 கோடி பெறுமாதியான சொத்துக்கள் தீக்கரையாக்கப்பட்டது.

(அறிய புகைப்படம் – அன்று கலவரம் முடிந்த பின் கனேத்தன்னையில் வெளியில் ஜுமுஆ நடத்துவதை படத்தில் காணலாம்)
இன்னும் பல அறிய புகைப்படங்களும் வீடியோக்களும் உள்ளன. இன நல்லினக்கம் கருதி அவற்றை பதிவேற்றவில்லை.

– ஷபீக் ஹுஸைன் –

11174854_933677443320001_7899693855146745152_n-1430467230314

11174854_933677443320001_7899693855146745152_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *