அமீரகத்தில் நடைபெற்ற மாவனெல்ல பிரீமியர் லீக்

மாவனெல்லை சாஹிர தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கிரிக்கெட் போட்டி “மாவனெல்லை பிரீமியர் லீக்” கடந்த 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அஜ்மான் விளையாட்டரங்கில் நடைபெற்று முடிந்தது.

அமீரகத்தில் வாழும் இலங்கையர்களின் வரலாற்றில் முதன் முறையாக இது போன்ற ஓரு ஊர் வாரியான விளையாட்டு போட்டியை நடாத்திய பெருமை மாவனெல்லை சாஹிர தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்துக்கே சாரும்.

12 அணிகள் மாவனெல்லையின் பல்வேறு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டன.180 இற்கும் அதிகமானவர்கள் இந்த போட்டிகளை கண்டு களிப்பதட்காக வருகை தந்தமையும் இங்கு குறுப்பிடத்தக்கது.

மாவனெல்லை சாஹிர தேசிய பாடசாலை இது போன்ற இன்னும் பல நிகழ்சிகளை அமீரகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக செய்து வருகின்றமை பலரும் அறிந்த விடயமே.

IMG_0102 IMG_0112 IMG_9318 IMG_9724 IMG_9836

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *