அமீரகத்தில் மாவனெல்லை சாஹிரா பழைய மாணவர்களின் கிரிக்கெட் போட்டி

அமீரகத்தில் மாவனெல்லை சாஹிரா பழைய மாணவர் சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் சாஹிரா பழைய மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் மென்பந்து விளையாட்டு போட்டி இந்த வருடத்தின் முதலாவது நாளில் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது.

வெள்ளிக்கிழமையன்று ஜூம்மாவை தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமான. அமீரகத்தில் உள்ள அஜ்மான் பிராந்தியத்தில் உள்ள ஒரு மைதானத்தில் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகள் சங்கத்தின் தலைவர் Mr. Rizvi Rasheed அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்றன. சுமார் 50 பழைய மாணவர்கள்  மிக உற்சாகத்துடன் கலந்து சிறப்பித்தனர்.

போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கும், பங்குபற்றிய அணிகளுக்கும் வெற்றிக் கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

அமீரகத்தில் மாவனெல்லை சாஹிரா பழைய மாணவர் சங்கம் தமது அங்கத்தவர்கள் மத்தியிலும் மற்றைய சங்கங்கள் மற்றும் அமைப்புக்கள் மத்தியில் பல்வேறு நிகழ்ச்சிகளை செய்து வருகின்றமை பலரும் அறிந்த விடயமே.
தகவல்:
Rizwan Rauf
VP – Mawanella Zahira UAE OBA

a aa aaa

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *