பலஸ்தீனம் சென்றடைந்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை பலஸ்தீனம் சென்றடைந்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதியை பலஸ்தீன பிரதம அமைச்சர் ராமி ஹம்தல்லா, இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி அன்வர் அல் அக்ஹா, பலஸ்தீனத்தில் பதிற் கடமையாற்றும் இலங்கை பிரதிநிதி சிராஜ் அஹமட் மற்றும் பெத்தலஹேமில் உள்ள இலங்கையின் கொன்சியூலர் ஜெனரல் மைக்கல் ஷோமாலி  ஆகியோர் வரவேற்றனர்.

பலஸ்தீனத்தை அடைந்த ஜனாதிபதி ராஜபக்ஷ, முன்னாள் பலஸ்தீன ஜனாதிபதி காலஞ்சென்ற யசிர் அரபாதின் சமாதிக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.  காலஞ்சென்ற யசிர் அரபாத் 1997ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்தபோது ஜனாதிபதி ராஜபக்ஷவையும் அவரது முழு குடும்பத்தினரையும் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பலஸ்தீன ஜனாதிபதி மஹ்முத் அப்பாஸை சந்திக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ விரிவான இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். இந்த விஜயத்தின்போது பலஸ்தீன அரசு, அந் நாட்டின் உயரிய அரச விருதான ‘பலஸ்தீன நட்சத்திரம்’ என்ற விருதை ராஜபக்ஷவிற்கு வழங்கவுள்ளது.

தொழிற் பயிற்சி நிலையமொன்றை பலஸ்தீனத்தில் அங்குரார்ப்பணம் செய்யும் ஜனாதிபதி, பெட்டூனியா நகர சபை பூங்காவில் ஒலிவ் மரக்கன்றொன்றையும் நடவுள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கா – பலஸ்தீன நட்புறவு சங்கத்தின் அங்கத்தினர்களையும் சந்திக்கவுள்ளார். அத்துடன் பெத்தலஹேம் நகரிலுள்ள இயேசு பிறந்த தேவாலயத்தில் நள்ளிரவு ஆராதனையிலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தில்  முதற் பெண்மணி ஷpரந்தி ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் த வாஸ் குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர்களான கமலா ரணதுங்க. ரொஷான் ரணசிங்க, ஜனாதிபதியின் செயலாளார் லலித் வீரதுங்க மற்றும் ஜோர்தானுக்கான இலங்கைத் தூதுவர் காமினி ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

1511102_10151784516906467_1258115208_n

1496619_10152180090982125_1080939170_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares