அமைச்சரவை மறுசீரமைப்பு: கபீர் ஹாஷிம் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள்

புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் கீழ் ஆறு புதிய அமைச்சர்களும் மூன்று இராஜாங்க
அமைச்சர்களும், பிரதியமைச்சர் ஒருவரும் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம்
செய்துகொண்டனர்.

இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர்களின் விபரம் பின்வருமாறு

அமைச்சரவை அமைச்சர்கள்

1. பிரதமர் ரணில் விக்ரமசிங்க – சட்டமும் ஒழுங்கும் தொடர்பான அமைச்சர்
2. லக்ஷ்மன் கிரியெல்ல – அரச தொழில்முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்
3. கபிர் ஹாசிம் – உயர் கல்வி, நெடுஞ்சாலைகள் அமைச்சர்
4. சாகல ரத்நாயக்க – இளைஞர் விவகாரம், தெற்கு அபிவிருத்தி அமைச்சர்
5. ஹரின் பெர்ணான்டோ – தொலைத்தொடர்பு, டிஜிடல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு
வேலைவாய்ப்பு அமைச்சர்
6. ரவீந்திர சமரவீர – பேண்தகு அபிவிருத்தி, வனசீவராசிகள் அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்கள்

7. பியசேன கமகே – இளைஞர் விவகாரம், தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
8.அஜித் பி பெரேரா – சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, சமூக
மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர்

9. ஹர்ஷ டி சில்வா – தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

பிரதி அமைச்சர்கள்

10. ஜே.சி.அலவத்துவல உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களின் மறுசீமைப்பு எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசாங்க கூட்டுத்தாபனம், சட்டவாக்க சபைகளின் நடவடிக்கைகளை
வினைத்திறன்மிக்க வகையில் மேற்கொள்வதற்கு தேவையான திருத்தங்கள்
மேற்கொள்ளப்படுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *