அமைச்சர் கபீர் ஹாசிமின் சகாவும் பனாமாவில் முதலீடு ?

Downloads317

சர்ச்சைக்குரிய பனாமா லீக்ஸ் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட இலங்கையர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளன.

இதனூடாக நிதி மோசடிகளில் ஈடுபட்ட இலங்கையர்கள் பற்றிய விரபங்களே வெளியிடப்படவுள்ளன.

ட்ரன்ஸ்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு இந்த விபரங்களை வெளியிடவுள்ளது.

இரண்டு வாரங்களில் இந்த விபரங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜே.சீ. வெலியமுன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இப்பட்டியலில் அமைச்சர் கபீர் ஹாசிமின் சகாவொருவரின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக அறியக் கிடைக்கிறது.

அவந்தி குமார ஜெயதிலக எனும் இந்நபர் தற்போது அமைச்சர் கபீர் ஹாசிமின் அமைச்சுக்கு கீழ் இயங்கும் பிரபர்ட்டி டெவெலொப்பெர்ஸ் பிஎல்சி நிறுவனத்தில் தலைவராக கடமையாற்றுகிறார்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் நெருங்கிய சகாவான வித்யா அமரபாலவின் பெயரும் பனாமா ஆவணங்களில் இருப்பது தெரிய வந்ததையடுத்து, அவர் தனது அமைச்சு ஆலோசகர் பதவியை அண்மையில் ராஜினாமா செய்திருந்தார்.

அத்துடன், இலங்கையின் பிரபல ஹேமாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களான மூன்று சகோதரர்கள், வரி ஏய்ப்புச் செய்து பெரும்தொகைப் பணத்தை பனாமாவில் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹுசைன் யூசுப் அலி ( husein esufally), அப்பாஸ் யூசுப் அலி (abbas esufally ) மற்றும் முர்தாஷா யூசுப் அலி (murtaza esufally) ஆகிய ஹேமாஸின் மூன்று சகோதரர்களின் பெயர்களே இப்பட்டியலில் அடங்கியுள்ளதாக அறியக் கிடைக்கிறது.

இலங்கை மத்திய வங்கி இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மிகவும் இரகசியமாகப் பேணப்பட்டு வந்த 11.5 மில்லியன் பனாமா ஆவணங்கள் இதுவரை சிக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

-தினசரி-

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *