அரச பாடசாலை ஆசிரியர்கள், தனியார் வகுப்புகள் நடத்த முடியாது

coaching balliaஅரச பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தனியார் வகுப்புகளை (ரியூசன்) நடத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வகுப்புகளை நடாத்துவது சட்டபூர்வமானதல்லவென கல்வியியலாளரும், சட்டத்தரணியுமான சமரசிங்க குணசேகர குறிப்பிட்டுள்ளார். இது சட்டத்தின்படி ஒரு குற்றமாவதுடன் ஆசிரிய நெறிகளை மீறும் செயலாகுமெனவும் பிரத்தியேக வகுப்புகளை நடத்துகின்ற ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமெனவும் சுட்டிக்காட் டியுள்ளார்.

பாடசாலை ஆசிரியர்கள் அரசாங்கத்திடம் சம்பளம் பெறுபவர்கள் என்பதோடு அந்தச் சட்ட ஏற்பாடுகளுக்கு இணங்க அவர்கள் வேறு தொழில்களை செய்வது சட்டவிரோதமானது. குறிப்பிட்ட சில அரச பாட சாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள், பாடசாலை நேரங்களில் தனியார் வகுப்புக்களுக்குச் செல்வ தனால் பாடத் திட்டத்தினை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் போகிறது எனத் தெரியவந்துள்ளது.

அவ்வாறான ஆசிரியர்கள் பாடசாலை நேரத்தில் தனியார் வகுப்புக்கள் மூலம மேலதிக பண மீட்டுவது, மேலதிக வகுப்புக்களில் கலந்து கொள்ளுமாறு மாணவர்களை பலவந்தப்படுத்துவது அவ்வாறு சமுகமளித்திராத மாணவர்களை பாடசா லையில் ஓர வஞ்சனையுடன் நடத்துவது தொடர்பான நிகழ்வுகள் தற்போது தெரிய வந்துள்ளன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *