அரநாயக்கவில் இருந்து இதுவரை 4156 பேர் இடம்பெயர்வு

அரநாயக்க பிரதேச செயலாளர் பிரிவு, கிராம சேவை பகுதிக்கு உட்பட்ட பல பிரதேசங்களில் இது வரை 4 156 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

23 மத்தியஸ்தங்களில் அவர்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரநாயக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அம்பலக்கந்த, கங்துன, கல்பொக்க போன்ற பிரதேசங்களில் மண் சரிவு இடம்பெற்றது

மேலும் அரநாயக்க சாமசர கந்தை பகுதியில் இடம்பெற்ற மண் சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *