அரநாயக்க அனர்த்தம்: பிரதேச முஸ்லிம்கள் எடுத்த உடனடி நடவடிக்கைகள்

அரநாயக்க பிரதேச செலயத்திற்கு உட்பட்ட  இலங்க பிட்டிய, மோரகமன, ஹத்கம்பல ஆகிய பகுதியில் இடம் பெற்ற கோர விதமான மண்சரிவு  நேற்று இரவு இடம்பெற்றது அறிந்ததே..

இதில் நூற்றுக்கும் அதிகமான  வீடுகள் மண்ணுக்கு காவு கொண்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை  கணிசமாளவு உயிர் இழப்புகள் ஏற்பட்டடிருக்கலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. இதில் சரியான உண்மை நிலவரம் இன்னும் தெளிவாக கூற முடியாது எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தின் காரணமாக இடம்பெயர்ந்து அரநாயக்க சிரிபுர விஹாரை மற்றும் சிரிபுர பாடசாலைகளில் அகதிகளாக சுமார் 300 பேர் அளவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த மக்களுக்கு இப்பகுதியலுள்ள முஸ்லிம்கள்  மறுகணம் இப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மக்கள் பெரிய பள்ளிவாசலில் ஒன்று கூடி இரா உணவு வழங்குவதிலும் தேவையான அவசர நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளிவாசல்களில் சமைத்து சுமார் 350 உணவுப் பார்சல்கள் இளைஞர்கள் பள்ளிவாசல் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் இணைந்து இரவு 10.00 மணி அளவில் கொண்டு போய் கொடுத்தார்கள்.

அதேவேளை உடனுக்குடன் அமைச்சர் கபீர் ஹாசிம் மற்றும் தெல்தோட்டை ஜம்மிய்யதுல் ஹைரிய்யா அமைப்பும் இணைந்து சுத்தமாண குடி தண்ணீர் போத்தல்கள் வழங்கியும் தொண்டு பணிகளில் ஈடுபட்டார்கள் இதில் அமைப்பின் பொருளாளர் முஸப்பீர் சாதீக் மற்றும் அமைச்சரின் பிரதிநிதியான  நிலார்டீன் மற்றும் ரியாஸஇங்கு காணக் கூடியதாக இருந்தன.
மாவனல்லையில் முஸ்லிம்கள் இம்மக்களுடைய தேவையைக் கருத்திற் கொண்டு உதவிகள் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த முகாம்களில் சிங்கள மக்கள் முஸ்லிம்களுடைய  மனிதாபினமான சேவைகளைப் பற்றி விதந்து பாராட்டக் கூடிய வகையில் பலர் கதைத்துக் கொண்டிருப்பதை காதுகளில் ஒலிக்கக் கூடியதாக இருந்தன.

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இராணுவம் சென்றுள்ளதாகவும்  அம்பியுலன்ஸ் வண்டிகள் அதிக எண்ணிக்கையில் இங்கு வந்திருப்பதையும் காணக்  கூடியதாக இருந்தன.

அங்கு நள்ளிரவு 12.00 மணி அளவில் இடம் பெற்ற சம்பவம் மட்டும் இங்கு அறியத் தருகின்றோம்.

-இக்பால் அலி-

13178564_1714778378810012_4746488152551778756_n 13179448_605432882954704_4353762456616240378_n 13226947_1714778272143356_3304600886051401158_n 13254151_1714778345476682_7264014201745257688_n 13254479_1714778298810020_6345497082502004995_n 13260195_605433002954692_9077431796965446883_n 13266026_1714778458810004_8452140553800012524_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *