அரநாயக்க மண்சரிவு: மீண்டும் எச்சரிக்கை

 

கடந்த வருடம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக அரநாயக்க, மாவனெல்ல பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டது.

இதனால் சுமார் 140 பேர் வரை உயிரிழந்திருந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் தற்போதும் நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் அரநாயக்க பிரதேசத்திற்கு மீண்டும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு மண்சரிவு அபாயம் உள்ள இடங்களில் இருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ உதவி செயலாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.

இந்த அனர்த்தத்தில் சுமார் 80 வீடுகள் வரை மண்ணுக்குள் புதையுண்டிருந்தன. இலங்கை வரலாற்றிலேயே இது ஒரு பெரிய மண்சரிவு என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவ்வாறான அழிவுகளை ஏற்படுத்திய அரநாயக்க பிரதேசத்திற்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares