அல் அக்ஸாவை கைப்பற்றுவது போன்று ஈரான் போர் ஒத்திகை

இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜெரூசலத்தின் புனித அல் அக்ஸா பள்ளிவாசலை கைப்பற்றுவது போன்ற பாரிய போர் ஒத்திகை ஒன்றில் ஈரானின் பலம்மிக்க புரட்சிப் படையின் ஆயிரக்கணக்கான துணை இராணுவத்தினர் பங்கேற்றுள்ளனர்.

இந்த போர் ஒத்திகையில் பள்ளிவாசலின் மாதிரி வடிவத்தை படையினர் கைப்பற்றுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டதாக ஈரான் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

புரட்சிப் படையின் 120ம் படைப்பிரிவின் துணை இராணுவத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருக்கும் இந்த போர் ஒத்திகையில் பங்கேற்றுள்ளனர். ஈரானின் புனித நகரான கவுமுக்கு வெளியில் இந்த யுத்த பயிற்சி இடம்பெற்றுள்ளது.

இந்த அடையாள யுத்த நடவடிக்கையில் இராணுவ ஹெலிகொப்டர்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் படையினர் தரைவழியாக முன்னேறும் முன்னர் எதிரிகளின் நிலை மீது அனுமானமாக குண்டு போடும் டுகானா விமானங்கள் பங்கேற்றுள்ளன.

இதில் அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு அருகில் இருக்கும் டோம் ஒப்தி ரொக் மாதிரி வடிவத்தின் தங்க நிற குவிவு மாடத்திற்கு மேல் படை வீரர் ஒருவர் நின்று ஈரானிய கொடியை அசைக்கும் படங்களை ஈரானிய அரசு வெளியிட்டுள்ளது.

iran-Al-Aqsha-696x464

You may also like...

1 Response

  1. rikza says:

    This pic z not masjid-ul-aksa..bt its the dome of sahra

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares