அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பிரதேசங்களில் ஊடரங்குச் சட்டம் (படங்கள் இன்னைப்பு)

அளுத்கம பிரதேசத்தில் சற்று முன்னர் பொதுபல சேனாவின் கூட்டம் முடிந்து செல்லும் போது, அவ்வமைப்பின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட கல் வீச்சுத் தாக்குதலினால், அப்பிரதேசத்தில் தற்பொழுது பதற்ற நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தர்காநகர் பள்ளிவாயல் காணப்படும் வத்தேகெதர பிரதேசத்தில் உள்ள கடைகளுக்கு கற்களை வீசி சேதம் ஏற்படுத்தியுள்ளதாகவும், அங்கிருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கண்ணீர்ப்புகை பிரயோகித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பாடுகின்றது.

நகரில் முஸ்லிம்களின் நடமாட்டத்தை குறைத்துக் கொள்ளுமாறும் முஸ்லிம் மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறும் கூட்டம் நடைபெற முன்னர் பொலிஸார் அறிவித்தல் விடுத்திருந்த்தனர். இதன் காரணமாக அவர்கள் வீடுகளை விட்டு நகரில் காணப்பட்ட பெரிய பள்ளிவாயல்களில் ஒன்று திரண்டு பாதுகாப்பாக இருந்ததாகவும் அப்பிரதேச செய்திகள் தெரிவித்தன.

எனினும் இன்று மாலை கிடைத்த தகவல்களின் படி ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்பொழுது அங்குள்ள வர்த்தக நிறுவனங்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதாக தெரியவருகிறது.

அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பிரதேசங்களில் உடனுக்கு அமுல்வரும் வகையில் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

10337757_1502049056679786_24984525927410563_n

10405359_1502049400013085_4149121184676094720_n

10441912_1502049166679775_650088140197335499_n

10426590_317559258409858_1761351143679105229_n

10451693_317558118409972_2724168574444762579_n

10462359_576985942421120_3976026069618714139_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *