ஆசிரியர்களை மதிப்போம், ஆசிரியர்கள் தண்டிப்பது உங்களுது நன்மைக்கே

z_jun-02-Teacher

கற்பதும், கற்றுக் கொடுப்பதும் இந்த மார்க்கத்தின் உயிர் நாடிகளாகும். விவசாயி
நிலத்தை உரமிட்டு வளப்படுத்துகிறார், இதனால் நல்ல  விளைச்சல்  கிடைக்கிறது.

அதுபோல்  ஆசிரியர்  அறிவு ஞானத்தையும், பண்புகளையும்  போதிக்கிறார்.  இதனால்
அறிவும்  பண்பும் உடைய  சமுதாயம்  உருவாகின்றது.  இவ்வாறு  உயர்ந்த
சமுதாயத்தை உருவாக்குகின்றவர்கள் ஆசிரியர்கள்.

உத்தமர்களுள் கண்ணியத்துக்குரியவர்களும் மரியாதை செலுத்தப்பட வேண்டியவர்களும் ஆசிரியர்களே..
அல்லாஹ் கூறுகின்றான்:
“விசுவாசிகளுக்கும் கல்வி ஞானமுடையவர்களுக்கும்   அல்லாஹ்  பதவிகளை
உயர்த்துகின்றான்”. (அல்குர்ஆன்: 58:11)

“மகனே பெற்றோர் எம்மை உலக நெருப்பிலிருந்து பாதுகாக்கிறார்கள். ஆசிரியர்களோ
மறுமையின் நெருப்பிலிருந்து  நம்மைக் பாதுகாக்கிறார்கள் “ என்பது  ஓர்  அறிஞனின் சொல்லாகும்.

ஆகவே உலக  நெருப்பிலிருந்து நம்மைக்காப்பாற்றும் பெற்றாருக்கு மரியாதை செய்வது  போலவே நரக நெருப்பிலிருந்து நம்மைக் காக்கும் ஆசிரியர்களுக்கும் அதிக மரியாதை செய்ய வேணடும்.

ஹாரூன் ரஷீத் என்று ஒரு கலீபா இருந்தார். மாமூன் என்பது அவரது மகனின்
பெயராகும்.  மாமூன், அபூ முஹம்மத்  என்ற ஆசிரியரிடம் கல்வி கற்று  வந்தார்.
ஒரு முறை ஆசிரியர்  பாடம் சொல்லிக்  கொடுக்க வந்தார்.

மாமூனை அழைத்தார். ஆனால் அவர் அங்கு உடனே வரவில்லை நேரம் கழித்து வந்தார். இதனால் ஆசிரியர் சற்று கோபப்பட்டார். மாமூனைப் பிரம்பினால் அடித்துவிட்டார். சிறுவன் மாமூன் அழத் தொடங்கினார்.

இவ்வேளை மாமூனைப் பார்க்க அமைச்சர் வந்தார். மாமூன் தன்னைப் பற்றி அமைச்சரிடம் முறையிடுவார் என ஆசிரியர் பயந்தார். மாமூனோ  அமைச்சரைக்  கண்டதும்  அழுகையை நிறுத்திவிட்டார். அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னார்.

ஆசிரியர் பற்றி எதுவுமே சொல்லவில்லை. அமைச்சர் திரும்பிச் சென்றார். பினன்ர்
ஆசிரியர் மாமூனைப் பார்த்து என்னைப் பற்றி அமைச்சரிடம் முறையிடுவீர் என்று
எண்ணினேன். நீர் எதுவும் சொல்லவில்லையே என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

அதற்கு மாமூன் “நான் உங்களைப் பற்றி எவரிடமும் குறை கூற மாட்டேன். ஒழுக்கம் புகட்டுவதற்காகவே என்னை அடித்தீர்கள். இதில் குற்றம் எதுவுமில்லை. இனிமேல் நான் ஒழுங்காக நடந்து கொள்வேன” என்றார்.

இந்த   மாமூன்  தான் பிற்காலத்தில்  அறிஞனாகப் புகழ் பெற்றார்.  தந்தைக்குப்
பின் கலீபாவாகவும் பதவியேற்றார்.

 

ஆசிரியர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “யார் பெரியவர்களை மதிக்கவில்லையோ
சிறியவர்களின் மீது அன்பு காட்டவில்லையோ அவர்  நம்மைச் சார்ந்தவர் அல்லர்”
என்று கூறினார்கள்.

 • ஆசிரியரின் முன்பு பணிவைக் கடைபிடிக்க வேண்டும்
 • ஆசிரியரின் ஆலோசனையை மதித்து ஏற்றுச் செயல் பட வேண்டும்
 • ஆசிரியரின் உயர்வையும் மதிப்பையும் விளங்கிச் செயல் பட வேண்டும்
 • ஆசிரியரிரை கண்ணியமாண பார்வையைக் கொண்டு பார்க்கவேண்டும்
 • ஆசிரியர் தன்னைத் தண்டித்தால் அதை தனது நன்மைக்காகத் தான் என்று விளங்கி செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்
 • ஆசிரியர்களின் வீட்டிலும் அறையிலும் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்
 • அவர்கள் மனம் புண்படும்படியான எந்த செயலையும் எந்த சொல்லையும்
  பயன்படுத்தகூடாது
 • அவர்கள் நடந்து செல்லும் போது நாம் வாகனங்களில் சென்றால்  நாம் இறங்கிச்
  செல்ல வேண்டும் அப்படி இல்லாவிட்டால் அவர்கள்  அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும்
 • ஆசிரியர்களுக்கு நம்மால் முடிநத அளவு உதவி செய்ய வேண்டும்
 • ஆசிரியர்கள் வேலை எதுவும் கூறினால் அதை மறுக்கமால்  உடனே நாம் உதவி செய்ய முயற்சி செய்ய வேண்டும்
 • ஆசிரியர்களுக்கு நாம் துஆ பிராத்தனை செய்ய வேண்டும்.

சிறந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், எந்த லாபநோக்கமும் இன்றி, பாடப்புத்தக அறிவு மட்டுமின்றி, பல்துறை பரந்த அறிவை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களின் உலகை விரியச் செய்து, உத்திரவாதமான எதிர்காலத்தை தொடர்ந்து வழங்கி வரும் ஆசிரியக் கண்மணிகள் கணிசமான அளவில் இருந்து, சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். கற்றல் கற்பித்தல் என்பதே அவர்களின் தாரக மந்திரம். இத்தகைய ஆசிரியர்கள், சமூக உருவாக்கத்தின் மூல ஆதாரங்களாக திகழ்கிறார்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *