இந்தச் சிறுமிகளுக்கு உதவுங்கள்

கேகாலை மாவட்டத்தில் தல்கஸ்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த ஜனாப் முனவ்வர் , பாத்திமா ஹூசைனா தம்பதிகளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். மூத்தவள் அஸ்மா, 12 வயது. இளையவள் ஸைனப், 9 வயது

தமது பிறப்பு முதலேயே மிகவும் அரிதானதொரு தோல் வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ள இருவரும் அதனைக் குணப்படுத்துவதற்காக கடந்த பல  வருடங்களாக பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இவர்களின் சிகிச்சைக்காக இதுவரை பல இலட்சம் ரூபாய்கள் செலவளிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியர்களின் ஆலோசணைப்படி வாழ்நாள் பூராவும் தொடர்ந்தும் மருந்துகளைப் பாவிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்

munaffarfamily

தமது வயதையொத்த ஏனைய சிறுமிகளைப் போல சாதாரணதொரு வாழ்க்கையை வாழ விரும்பும் இவர்கள் தற்போது தல்கஸ்பிடிய முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர். 7ஆம் வகுப்பில் அஸ்மாவும் நான்காம் வகுப்பில் ஸைனப் உம் கல்வியை தொடர்கின்ற நிலையில் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் சக மாணவர்கள் அனைவரும் இவர்கள் கற்பதற்காக தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்

சவுதி அரேபியாவில் ஹோட்டல் இன்டகொண்டினன்டில் தொழில் புரிந்த ஜனாப் முனவ்வர் தனது சம்பாத்தியம் முழுவதையுமே இவர்களின் சிகிச்சைக்காக செலவிட்டுள்ளார். தனது முள்ளந்தண்டில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையைத் தொடர்ந்து தற்போது எந்த வித தொழிலுமே செய்ய முடியாத நிலையில் உள்ளார் ஜனாப் முனவ்வர்.

பாத்திமா அஸ்மா மற்றும் பாத்திமா ஸைனப் தமது வாழ்நாள் பூராவும் மருந்துகளுடனேயே வாழ வேண்டிய நிலையில் மாதாந்தம் சுமார் 25 ஆயிரம் ரூபாய்களை மருந்திற்காக மாத்திரம் செலவளிக்கவேண்டியுள்ளனர்.

எந்தவித தொழிலுமே செய்ய முடியாத நிரந்தர நோயாளியான ஜனாப் முனவ் வர் தனது பிள்ளைகளுக்கு அன்றாடம் தேவையாகும் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு உங்களுடைய நிதியுதவிகளை நாடுகின்றார்.

001

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *