இன்னும் சிறிதளவே தேவைப்படுகின்றது. உதவமுடியுமா?

மாவனல்லையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சகோதரர் நிதாம்தீனின் தலையில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்றுவதற்காக 25 இலட்சம் ருபாய்கள் தேவைப்படுவதாக நாங்கள் இணையம் ,முகநூல் போன்றபல் வேறு ஊடகங்கள் மூலம் அறிவித்து நிதி சேகரிப்பதற்கு ஒத்துழைக்கும்படி கேட்டிருந்தோம்.

எமது வேண்டுகோளை ஏற்று பலரும் தங்களால் இயன்றவரையில் முகநூல் மூலம் விளம்பரப்படுத்தி இந்நிதிசேகரிப்புக்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

அதன்காரணமாக இதுவரை உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக சுமார் 16 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய்களை அவரது சத்திரசிகிச்சைக்காக சேகரித்துக்கொள்ள முடிந்துள்ளது.

சத்திரசிகிச்சைக்காக சகோதரார் நிதாம்தீன் அவர்களை இந்தமாதம் ( ஆகஸ்ட்) 25 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கும்படி வைத்தியர் அறிவுருத்தியிருந்தார். இருப்பினும் தேவையான மொத்தத் தொகை 25 இலட்சங்களை உரியநேரத்தில் சேகரித்துக்கொள்ள முடியாது போனதனால் நாங்கள் அவரின் அனுமதியை ஒரு வாரத்திற்குதள்ளிப் போட நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்.

இச்சத்திரசிகிச்சைக்காக இன்னும் சுமார் 9 இலட்சம் ரூபாய்கள் தேவைப்படுகின்றது. எனவே இதுவரை இப்பணியில் ஒத்துழைக்கத் தவறிய சகோதரர்கள் இந்நிதியை திரட்டிக்கொள்ள உதவமுடியுமா என சகோதரர் நிதாம்தீனின் குடும்பத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.

இந்தப் பணியில் ஒத்துழைத்த அனைதது அன்பர்களினதும்;அவர்களது குடும்பத்தினரதும் ஆரோக்கிய வாழ்விற்கும் அவர்களின் தொழில் அபிவிருத்திற்கும் சகோதரர் நிதாம்தீனின் இனதும் அவரது குடும்பத்தினதும் பிரார்த்தனைகள் என்றென்டும் உண்டு என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

அத்தோடு வெளிப்பிரதேசங்களில் அல்லது வெளிநாடுகளில் சகோதரர் நிதாம்தீனின் சத்திரசிகிச்சைக்காக நிதி சேகரிப்புக்களில் ஈடுபட்டு இது வரை அதனை ஒப்படைக்காதச கோதரர்கள் இருப்பின் பின் வரும் ஈமெயில் அல்லது தொலைபேசி மூலம் அவை சம்பந்தமான விடயங்களை எமக்கு அறியத்தந்தால் அவரது சத்திரசிகிச்சையை திட்டமிட பெரிதும் உதவியாக இருக்கும் என்பதனை கூறிக்கொள்கின்றோம்.

அத்தோடு தனிப்பட்ட முறையில் உதவ விரும்புபவர்களும் ஈமெயில் அல்லது தொலைபேசி மூலம் இந்த விடயங்களை எமக்கு அறியத்தந்தால் இன்ஷாஅல்லாஹ் திட்டமிட்படி இன்னும் ஒருவாரத்திற்குள் அவரை சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்க இலகுவாக இருக்கும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

Contact Details:
Phone: 0094 724099767 ( Mrs. F. Risna )
0094 71 8110 732 ( RifanHussain )
0094 76 536 2 536 ( Amjideen)

email :rifanhussain@yahoo.com, asirmabm@gmail.com

Account Details:
Name of Account Holder : M.N. FathimaRisna
Account No. : 7423429
Bank : Bank of Ceylon
Branch : Mawanella
Swift Code : BCEYLKLX

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares