இன்று சிங்கள ராவய அமைப்பு மாவனல்லை நகரில் நடத்திய கூட்டத்தில் தெரிவிட்கப்பட்ட கருத்துக்கள்

மிருக வதையை உடனடியாக நிறுத்துமாறுகோரி சிங்கள ராவய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று(11) காலை 10 மணி அளவில் சும்மார் 60 பேருடன்  மாவனல்லை நகரை வந்தடைந்தது. நகர் மத்தியில் சும்மார் ஒரு மணி நேரம் கூட்டமொன்றை நடத்தி விட்டு கொழும்பு நோக்கி புறப்பட்டனர். இக் கூட்டத்தின் போது தெரிவிக்கப்ட்ட கருத்துக்கள் வருமாறு:

மிருகவதையை எதிர்த்து கடந்த வருடம் தலதா மானிகையின் முன் உயிர்த்தியாகம் செய்த போவத்தே இந்திர ரத்ன தேரர் தெரிவித்தபடி தாம் ஒரு சங்கம் அமைத்துள்ளோம். அச்சங்கத்தில் 500 பேர்
உள்ளனர். அதில் ஒருவரே மேற்படி இந்திரரத்ன தேரர் மிருகவதைக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்தார். எனவே இன்னும் ஒரு கிழமைக்குள் ஜனாதிபதி நாட்டில் இடம்பெறும் மிருகவதையை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மீதமிருக்க 499 பேர் உயிர்த்தியாகம் செய்ய வேண்டிவரும் என தெரிவித்தனர்.

மேலும் முஸ்லிம்களின் சட்டங்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம். இது பெளத்த நாடு நாங்கள் போடும் சட்டங்களுக்கு முஸ்லிம்கள் அடிபணிய வேண்டும், தெவனகலையை கைப்பற்ற மீண்டும் நாம் வருவோம் எனவும் அவர் அத்துடன் துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்துள்ளனர்.

கடும்போக்கு பெளத்த அமைப்புக்களில் ஒன்றான சிங்கள ராவய அமைப்புக்கு இலங்கையின் எந்தப் பாகத்திலும் போராட்டங்களை நடத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

download (51)

download (33)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares