இன்று தோன்றுகிறது ‘சூப்பர் மூன்னும்’; பூமியில் ஆபத்தான மாற்றங்கள் ஏற்படும்?

சந்திரன் தனது வட்ட பாதையில் சுற்றி வரும்பொழுது, சில நேரங்களில் பூமியை நோக்கி நெருங்கி வரும். இது ‘சூப்பர்மூன்’ என்று பெயரால் அழைக்கப்படும். இவ்வாறான ஓர் நிகழ்வு இன்று (10) விண்ணில் ஏற்படும்.

பூமிக்கு மிக அருகில் வருவதால் பார்ப்பதற்கு வழக்கத்தை விட சற்று பெரியதாக நிலவு காட்சி தரும். சந்திரனின் இந்த மாறுபட்ட இயக்கத்தால் பூமியில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

நிலவின் இயக்கம் காரணமாக பூமியில் நிலநடுக்க அபாயங்களும், ‘பிளேக்’ போன்ற உயிர்க்கொல்லி வியாதிகளும் மற்றும் எரிமலை சீற்றங்களும் அதிகரிக்க கூடும் என்று ‘டெய்லி எக்ஸ்பிரஸ்’ செய்தி இதழ் தெரிவித்துள்ளது.

சந்திரன் பூமியை நெருங்கும்போது வானில் மிக அதிக வெளிச்சம் காணப்படும். இதன் தாக்கத்தால், பூமியில் அலைகள் அதிக உயரத்துடன் எழும்பும். பூமியின் அடுக்குகள் இடம் பெயரும்.

பூமியை மாலை 6 மணியளவில் நெருங்கும்பொழுது சந்திரன் 2 இலட்சத்து 21 ஆயிரத்து 765 மைல்கள் தொலைவில் இருக்கும். அப்பொழுது, 16 சதவீதம் பெரியதாகவும் மற்றும் 30 சதவீதம் அதிக வெளிச்சத்துடனும் அது இருக்கும். பூமியை வழக்கத்திற்கு மாறாக 863 மைல்கள் அருகில் நிலவு நெருங்கி வரும். இதனால் கடல் மட்டங்கள் உயரும் அபாயம் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது எனவும் ‘டெய்லி எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

image

You may also like...

1 Response

  1. Fathima says:

    ohh god…then ask dhua for everyone ! i.allah allah will save us.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares