இன்று மாவனல்லையில் நடைபெற இருந்த பொதுபல சேனாவின் உண்ணாவிரதப் போரட்டம் ரத்து…

மாவனல்லையில் பொதுபல சேனா அமைப்பினர் இன்று மாலை நடாத்தவிருந்த உண்ணாவிரதப் போரட்டத்தினை கைவிடுவதற்கு அந்த அமைப்பின் மாவனல்லை அமைப்பாளர் தீர்மானித்துள்ளார்.
மாவனல்லை பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் பொதுபல சேனா அமைப்பின் மாவனல்லை அமைப்பாளரை அழைத்து போரட்டத்தை நிறுத்துமாறும் மீறி நடாத்தப்படுமாயின் துப்பாக்கிப் பிரயோகத்துக்கான உத்தரவு வழங்கப்படும் என்றும் அவர் கடுமையான எச்சரிக்கை விடுத்ததையடுத்து இந்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த உண்ணாவிரதப் போராட்டாத்துக்கு தடையுத்தரவு கோரி மாவனல்லை பொலிஸார் இன்று நீதிமன்றம் சென்றனர். உண்ணாவிரதப் போராட்டாம் நடாத்தப்படுமானால் அங்கு கலவர நிலை தோற்றுமென்று அச்சம் காரணமாகவே பொலிஸார் இந்த தடையுத்தரவை கோரியிருந்தனர்.

ஆனால் மாவனல்லை நகரமெங்கும் பொலிசார் மற்றும் பொலிஸ் கலகத்தடுப்பு பிரிவினரும் இன்னும் குவிக்கபட்டுள்ளமை குறுப்பிடத்தக்கது…

10406537_661610147250601_3846583483559386588_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *