இன்று ஹலாலுக்கு எதிராக கொழும்பில் இருந்து கண்டிகு பேரணி

நடைமுறையிலுள்ள ஹலால் திட்டத்தை நிறுத்த வேண்டி இன்று (22)பொது  பலசேன இயக்கத்தினர் கொழும்பிலிருந்து கண்டி தலதா மாளிகை வரை வாகன உரைவலம் ஒன்றை  ஆரம்பித்துள்ளது.

கொழும்பில் பொது பல சேனாவின் தலைமையகத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமான இவ் ஊர்வலம் மாலை கண்டியை சென்றடைய ஏற்பாடு செய்துள்ளார்கள். ஹலால் திட்டத்தை நிறுத்துவதாக ஜம்மியத்துல் உலமாவினர் தமக்கு வாக்களித்தாலும் அது இன்று வரை நடைமுறையில் உள்ளதாக பொது பல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூருகிறார்.

றித்த வாகனத் தொடரணியில் அம்பேபுஸ்ஸ மற்றும் குருநாகல் பிரதேசங்களிலிருந்தும் வாகனங்கள் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் பொது பல சேனா அறிவித்துள்ளது.அத்துடன் இன்று மாலை 1:30 மணியளவில் கேகாலையில் விசேட பொதுகூட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூஜை வழிபாடு மாலை கண்டியில் நடைபெறவுள்ளது.

3803_10153450207740019_1031565494_n

1393246_10153450207635019_2070939118_n

halal-protest-003

Photo – virakesari

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *