இரண்டு இரவுத்தொழுகைகளில் புனித குர்ஆனை ஓதும் நிகழ்வு, இன்று ஆரம்பமாகும்.

கிருங்கதெனிய மஸ்ஜிதுன் நூர் ஜும்மா பள்ளிவாயலில் ரமழான் மாதத்தில் தராவீஹ் தொழுகையில் முழு குர்ஆனும் ஓதி முடிக்கப்படுவது வழமையாகும்.

தினமும் ஒரு ஜுஸ்வு வீதம் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாயலில் நடைபெற்று வரும் பகுதி நேர மத்ரஸா மாணவர்கள் மூலம் நடாத்தப்பட்டு 27 ம் இரவு தராவீஹின் போது குர்ஆன் தமாம் செய்யப்படும்.

தற்காலத்தில் மார்க்க விடயங்களில் பொது மக்களிற்கு ஏற்பட்டுள்ள வரவேற்கத்தக்க ஆர்வத்தினை நிவர்த்தி செய்ய மஸ்ஜிதுன் நூர் நிர்வாகம் பலதரப்பட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்துவருகின்றது.

அந்த வகையில் இந்த ரமழான் மாதத்தில் விஷேடமாக கடைசிப் பத்து தினங்களில் மக்கள் இரவுத்தொழுகைகளில் அதீத ஈடுபாடு காட்ட வேண்டும் என்பதற்காக இன்றும் (05.08.2013) நாளையும் நாளொன்றிற்கு 15 ஜுஸ்வுகள் வீதமாக 2 தினங்களில் முழு குர்ஆனையும் இரவுத் தொழுகைகளில் தொழவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வழமையான தராவீஹ் நேரத்திற்கு ஆரம்பிக்கப்படும் இந்நிகழ்வு அதிகாலை 12.45 மணியளவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் இவ்விரண்டு நாட்களும் கலந்து கொள்வதன் மூலம் நன்மைகளை அடைந்து கொள்ளுமாறு எதிர்பார்க்கப்படுகினர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *