இரத்த தானம் செய்வோரின் தினத்தை ஒட்டி நாளை மாவனல்லை பூட் சிட்டிக்கு முன் அணிதிரளவும்

எதிர்வரும் ஜுன் 14ஆம் திகதி உலக இரத்த தானம் செய்வோரின் தினம் இரத்த தானம் தினமாகும். இலங்கையில் சுயமாகவே இரத்த தானம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் இம்முறை உலக இரத்த தானம் செய்வோர் தினத்தை இலங்கையில் அனுஷ்டிப்பதென உலக சுகாதார ஸ்தாபம் தீர்மானித்துள்ளது.

இதனை ஒட்டி திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி வாகனப் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனப் பேரணி நாளை வெள்ளிக்கிழமை மாவனல்லை நகரை வந்தடையயுள்ளது. நாளை மதியம் 1.30 மணிக்கு மாவனல்லை பூட் சிட்டிக்கு முன்னால் ஒரு நிகழ்வொன்றும் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கையில் அதிக எண்ணிக்கையானோர் இரத்த தானம் செய்வதை முன்னிட்டு இதனை உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதியும் நோக்கில் தேசிய இரத்த தான சேவைக்கொடியில் நாடுமுழுவதிலும் 50,000 பேரின் கையொப்பத்தை பெறுவதற்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களும் இரத்த தானம் செய்பவர்கள் என்பதை நிரூபிக்க சரியான சந்தர்ப்பம் எனவே மாவனல்லை முஸ்லிம்கள் அனைவரும் நாளை (06) ஜும்மா தொழுகையின் பின்னர் மதியம் 1.30 மணிக்கு மாவனல்லை டிபோவுக்கு முன்னால் வந்து அங்கிருந்து பேரணியாக மாவனல்லை பூட் சிட்டிக்கு முன்னால் நடைபெறும் நிகழ்வில்விற்கு அழைத்து வரப்படவுள்ளனர். எனவே இந்நிகழ்வில் மாவனல்லை முஸ்லிம்கள் அனைவரும் கலந்துகொள்ளும் படி வேண்டிக்கொள்கிறோம்.

இது தொடர்பான விசேட வைபவம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜுன் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Blood Donor Logo

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *