இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி 23 பேர் படுகாயம் கேகாலையில் சம்பவம்

கேகாலை பொல்கஹவெல இம்புல்கஸ்தெனிய பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்து இன்று (11) காலை 07.45 அளவில் இடம்பெற்றதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் பஸ் ஒன்றும் ஆடைத் தொழிற்சாலை பெண்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 15 பேர் பொல்கஹவெல வைத்தியசாலையிலும் 08 பேர் குருநாகல் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares