இலங்கையின் மிகப்பெரிய சமூக வலைத்தள ஒன்றுகூடல் TweepUpSL

மனித வாழ்வின் தவிர்க்க முடியாத ஒன்றினைந்த விடயமாக சமூக வலைத்தளங்கள் காணப்படுகின்றமையினை இன்று எம்மால் அவதானிக்க முடிகின்றது.

இலங்கை இளம் வயதினரிடையே பேஸ்புக் அதிக பிரபலமாக இருந்தாலும் உலகில் அதிக மக்களால் குறிப்பாக பிரபல நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், சமூக மற்றும் மார்க்க அறிஞர்கள், நிறுவனங்களினால் அதிகமாக பயனபடுத்தப்படும் சமூக வலைத்தளமாக டுவிட்டர் இணையத்தளமே காணப்படுகின்றது.

பேஸ்புக் போலன்றி டுவிட்டரானது மட்டுப்படுத்தப்பட்ட 140 எழுத்துக்கள் மூலம் இலகுவாகவும் விரைவாகவும்் மக்களுக்கு தகவல்களை வழங்குவதில் முன்நிற்கின்றமை இதன் விசேட அம்சங்களில் ஒன்றாகும். டியூனிஷியா, எகிப்து மற்றும் லிபியா அரபுலக வசந்தம் புரட்சியின் போது டுவிட்டரின் பயன்பாடு முக்கிய அம்சமாகும்.

இலங்கையில் டுவிட்டரின் பயன்பாடு பேஸ்புக்கினை விட குறைந்த போதிலும் பயன்களின் அடிப்படையில் பொது மக்களிற்கும் பயன்படுத்துபவர்களுக்கும் அதிக பிரயோசனமளிப்பதாகவே காணப்படுகின்றது.

அந்த வகையில் இலங்கை டுவிட்டர் பாவனையாளர்களின் வருடாந்த ஒன்றுகூடல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடக்தக்க விடயமாகும்.

இதன் தொடர்ச்சியாக நான்காவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள TweepUpSL4 நிகழ்வானது இம்முறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 திகதி Mercantile Cricket Association இல் நடைபெறும்.

இவ்வருடம் வழமையான ஒன்றுகூடல் போலல்லாது Water with Difference எனப்படும் சமூக செயற்றிட்டத்திற்கும் Needy Readers எனப்படும் நூலகங்களிற்கு இலவச புத்தகம் வழங்கும் செயற்றிட்டத்திற்கு ஒத்துழைக்கும் நிகழ்வாகவும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பாராட்டத்தக்க விடயமாகும்.

இதுவரை இந்நிகழ்விற்கு தம்மை பதிவு செய்யாதவர்கள் www.tweepupsl.org இணையத்தளம் மூலம் பதிவுகளை மேற்கொள்ள முடியும். இந்நிகழ்வானது dialog நிறுவனத்தின் அனுசரணையில் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *