இலங்கையில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை – தமிழகத்தில் ரனில்

 

(சென்னை விடிவௌ்ளி நிருபர்)
 
இலங்கையில் தமிழர்கள் மட்டுமின்றி முஸ்லிம்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை காணப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய தினம் சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை வடக்கு மாகாண தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடுகிறது. ஆளும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கை இல்லை. ராஜபக்ச அரசு நேர்மையான முறையில் தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
இலங்கையில் தமிழர்கள் மட்டுமின்றி முஸ்லிம்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது என அவர் கூறினார்.
– சென்னை விடிவௌ்ளி நிருபர்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares