இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது -கோட்டாபாய ராஜபக்ஷ

இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதத்தை ஊக்குவிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து அவதானத்துடன் இருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (03/08/2013) இடம்பெற்ற பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் சில குழுக்கள் இனவாதத்தை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச தீவிரவாத சக்திகள் முஸ்லிம் தீவிரவாதத்தை இலங்கையில் பரப்புவதற்கு முயற்சிப்பதாக தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து பாதுகாப்பு தரப்பினருக்கு புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில முஸ்லிம் தீவிரவாத இயக்கங்கள் இலங்கையை மையமாகக் கொண்டு இயங்க முயற்சித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாகவும் கோட்டாபாய ராஜபக்ஷ கூறினார்.

30 வருட யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதும் சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் தொடர்வதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *