இலங்கை சட்டத்தரணிகள் சங்க பிரதானிகள் அளுத்கம, தர்கா நகர், பேருவல பகுதிகளுக்கு விஜயம்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதன் தலைவர் திரு. உபுல் ஜயசூரிய உள்ளிட்ட பிரதானிகள் சகிதம் இன்று மதவெறி வன்முறைகளுக்கு உள்ளான அளுத்கம, தர்கா நகர், பேருவல பகுதிகளுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்கின்றனர்.

தேசிய ஷூரா சபை பிரதித் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி எம் எம் சுஹைர், முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோரும் இக்குழுவுடன் இணைந்து செல்கின்றார்,

கடந்த சனிக்கிழமை தேசிய ஷூரா சபை ஏற்பாட்டில் தேசிய ஷூரா சபை பிரதானிகளுடன் இலங்கை முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கத்தினர் அந்த பகுதிகளுக்கு விஜயம் செய்து சட்ட நடவடிக்கைகளுக்கான முன்னேற்பாடுகளை செய்தமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் விசாரனைகள் நிறைவுறுமுன் அவசர அவசரமாக பாதிக்கப்பட்ட பிரதேசம் இராணுவத்தினால் துப்பரவு செய்யப்படுவதில் உள்ள சட்ட சிக்கல்கள்,அநீதிகள் குறித்து ஜனாதிபதியின் செயலாளருக்கும் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்புக்களுக்கும் தேசிய ஷூரா சபை அவசர கடிதங்களை அனுப்பிவைத்துள்ளது.

பூர்வாங்க உள்ளூர் கணிப்பீடுகளின் படி ஏற்பட்டுள்ள இழப்பு 300 கோடி ரூபாய்கள் ஆகும், எனினும் அரசு 20 கோடி ரூபாய்களையே ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
போரமைப்பு வேலைகள் பாதுகாப்பு மற்றும், நகர அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படுவதனால் 15 கோடி ரூபாய்கள் புனரமைப்பு பணிகளுக்காக இராணுவத்திற்கும், மிகுதி 5 கோடி ரூபாய்கள் களுத்துறை மாவட்ட அரச அதிபருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

10421158_1500499720162712_3953590527065483256_n

10462839_1500499730162711_4557026400914557884_n

10489837_1500499723496045_3974472484795612080_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares