இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 62ஆவது வருடாந்த தேசிய மாநாடு

தேசம் காண்போம் நேசமுடன்; உடன்பாடு வளர்ப்போம் உறுதியுடன்! எனும் பிரகடணம் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 62ஆவது வருடாந்த தேசிய மாநாடு சனிக்கிழமை காலை 8.30 இரவு 8.30 மணி வரை முதல் சாய்ந்தமருது லீ மரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பரின் தலைமையில் நடைபெற்ற வருடாந்த தேசிய மாநாட்டில் ஜமாஅத்தே இஸ்லாமியின் பகுதிகள் மற்றும் துணை அமைப்புகளின் கடந்த வருட செயற்பாடுகள் குறித்து அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்தோடு, அங்கத்தவர்களைத் தகைமைப்படுத்தும் நிகழ்ச்சி, ஆளுமை விருத்தி நிகழ்ச்சி, அமீர் தெரிவு, மஜ்லிஸுஷ் ஷூரா தெரிவு, பிராந்திய நாஸிம்கள் தெரிவு, பிரமுகர் அமர்வு மற்றும் கலை, சலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இங்கு உரையாற்றிய இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்,

சமூகங்கள் மற்றும் நாகரிகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, கலந்துரையாடல் என்பவற்றை அதிகமாக வலியுறுத்தும் ஒரு காலப் பகுதியில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்தப் புரிந்துணர்வு முன்னெப்போதுமில்லாதளவு நலிவுற்றிருப்பதே இதற்குக் காரணம். அதனால் உலக அமைதி கேள்விக்குறியாகி மாறியுள்ளது.

ஐ.நா விஷேடமாகவும் அமெரிக்கா போன்ற வல்லரசுகள் குறிப்பாகவும் உலக அமைதியைப் பாதுகாக்கத் தவறிவிட்டன. தீவிரவாதங்கள், வன்முறைகள் உலக அரங்கில் செல்வாக்குச் செலுத்துகின்றன. மதங்கள் மீதான நம்பிக்கைகள் மக்கள் மனங்களில் சரிந்து கொண்டிருக்கிருக்கின்றன.

எமது நாட்டில் போர்ச் சப்தம் ஓய்ந்து சகவாழ்வும் நல்லிணக்கமும் அபிவிருத்தியும் நல்லாட்சியும் பேசுபொருளாக மாறியிருக்கின்றன. இது சிதைந்து போயிருக்கும் உலக அரங்கில் எமது தேசத்துக்குக் கிடைத்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பு என்றே கொள்ளப்பட வேண்டும். இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே நாம் இந்த அங்கத்தவர் தேசிய மாநாட்டை இன்று நடத்துகின்றோம்” என்றார்.

இந்த நிகழ்வில், மாநாட்டுப் பிரகடனம் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

cd6f45a640793cd9d685adf757f8e5e8b5be9fc427fa609f6486c9514f508ee26a4cb627a9acee11d47809350d8def0f22ba24c3e4916022656-1416201572913 cd6f45a640793cd9d685adf757f8e5e8b5be9fc427fa609f6486c9514f508ee26a4cb627a9acee11d47809350d8def0f22ba27c3e4916022656-1416201573259 cd6f45a640793cd9d685adf757f8e5e8b5be9fc427fa609f6486c9514f508ee26a4cb627a9acee11d47809350d8def0f22ba22c3e4916022656-1416201570910

cd6f45a640793cd9d685adf757f8e5e8b5be9fc427fa609f6486c9514f508ee26a4cb627a9acee11d47809350d8def0f22ba22c3e4916022656

cd6f45a640793cd9d685adf757f8e5e8b5be9fc427fa609f6486c9514f508ee26a4cb627a9acee11d47809350d8def0f22ba24c3e4916022656

cd6f45a640793cd9d685adf757f8e5e8b5be9fc427fa609f6486c9514f508ee26a4cb627a9acee11d47809350d8def0f22ba27c3e4916022656

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *