இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஹெம்மாதகம கிளையின் உலர் உணவு விநியோகம்

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஹெம்மாதகம கிளை கடந்த பல வருடங்களாக ரமழான் மாத முதலாம் வாரத்தில் அப்பிரதேசத்தில் வாழும் வறிய, தேவையுடையோருக்கு உலர் உணவு விநியோகம் பலவற்றை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் இம்முறையும் ஹெம்மாதகம பிரதேசத்திலுள்ள கிராமங்களான தும்புழுவாவ, கொடேகொட, வாடியதன்ன, மடுல்போவ, அமுருப்ப, ஹிஜ்ராகம, பள்ளிப்போருவ, என்பவற்றில் திட்டமிட்டு அமுல்படுத்திக்கொண்டு வருகிறது.

கடந்த 29ம் திகதி தும்புழுவாவயிலும் 30ம் திகதி கொடேகொடயிலும் ஜூன் 1ம் திகதி மடுல்போவையிலும் 170 பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஏனைய கிராமங்களில் எதிர்வரும் வாரங்களில் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஏழை, எளியவர்களை உரிய முறையில் இனங்கண்டு அவர்களின் வாசல் தேடி, இவ் உலர் உணவுப் பொதிகள் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

2 download (3) download (4)

10463902_10152392497578159_5040025055890264302_n

1885997627ramzan2

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *