இளம் சாதனையாளராக இந்தோனேசியா செல்லவுள்ள சாஹிரா கல்லூரி மாணவன்

மாவனல்லை சாஹிரா கல்லூரி தரம் 10 A ல் கல்வி கற்கும் M.Z.M அய்யாஷ் எனும் மாணவன் “Energy Saving Efficient Cooking Pot” எனும் சக்தியை சேமித்து விரைவாக சமைக்கக் கூடிய புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளார்.

இக்கண்டுபிடிப்பு “InnovaMinds – 2017” எனும் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான தேசிய மட்ட போட்டி நிகழ்ச்சியில் தேசிய மட்டத்தில் சிறந்த 07 படைப்புகளில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டு,கடந்த

மாதம் 28ம் திகதி MBICH ல் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப கௌரவ அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவின் தலைமையில் இடம் பெற்ற

பரிசளிப்பு விழாவில், பரிசில்களும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், எதிர்வரும் செம்டெம்பர்
மாதத்தில் இந்தோனேசியாவில் இடம் பெறவிருக்கும் சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில்
இலங்கை சார்பாக கலந்து கொள்ளவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இப்போட்டி நிகழ்ச்சி பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 7:30 மணிக்கு இலங்கை ரூபவாஹினியில் ஒளிபரப்பாகும்.

You may also like...

1 Response

  1. Nuzrath says:

    thanks for publishing the news “Mawanella News Team”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares