இளம் வீரர் அறிமுகம்

புதியதோர் சாதனை!

உலகின் பிரசித்தமான தற்காப்புக் கலைகளில் ஒன்றே கராத்தே கலையாகும். இது தொடர்பான போட்டி நிகழ்வுகள் உலகளாவிய ரீதியில் நடைபெற்று வருவது நாம் யாவரும் அறிந்ததே!

அண்மையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (2013.06.30) அன்று இலங்கை ரம்புக்கனை பிரதேசத்தில் நடைபெற்ற Cumitea Karate International Meet போட்டியில் நமது ஊரைச்சேர்ந்த ஒரு இளம் வீரனின் சாதனை குறிப்பிடத்தக்கது.இவர் 15 வயதின் கீழான பிரிவு போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.மாவனல்லை சாஹிரா கல்லூரியின் தரம் பத்து (10 C ) இல் கல்வி பயிலும் அப்துல் வகீல் ரிகாஸ் அஹம்மத் என்ற இளம் மாணவனே இந்த சாதனையாளர் ஆவார். இவர் கனேதன்னை பிரதேசத்தை சேர்ந்த ஜனாப் A.C.A வகீல், மற்றும் ஜனாபா ரசீனா தம்பதிகளின் செல்வப்புதல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற வித்தியாசமான திறமைகள் நம் முஸ்லிம் மாணவர் சமூகத்திடம் மிகவும் வரவேட்புக்குரியது என்றால் அது மிகையல்ல….!!!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *