இஸ்லாத்தின் பார்வையில் “வேலண்டைன் டே” (காதலர் தினம்)

ரோமானியர்கள் இந்த  தினத்தினை அவர்களது நம்பிக்கை படி கால்நடைகளை பாதுகாகாக்கும் கடவுளான “ரக்ஸ்” எனும் கடவுளுக்கு பலியிட்டு வழிபடும் நாளாக  காணப்பட்டது.அவர்களது நாட்காட்டியின் படி பருவகாலமான விடுமுறையாக  இருந்தது.Anti-valentines-day-6

அதாவது பிப்ரவரி 13 ம் நாள், இதன் பின்னர். ரோம பேரரசரான இரண்டாம் “கிளாடியுஸ்” காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் எண்ணம். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என துடித்த ஆண்களுக்கு உதவினார் “வேலண்டைன்”.

அரச கட்டளையை மீறி திருமணங்கள் நடத்தி வைத்தார். மன்னனுக்கு விஷயம் தெரிய வந்தபோது “வேலண்டைனைப்” பிடித்து மரண தண்டனை விதித்து தூக்கிலிட்டார். அவர் கொல்லப்பட்ட நாள் தான் பிப்ரவரி 14. இது நடந்தது கி.பி 270. “வேலண்டைன்ஸ் டே “குறித்து உலவும் சரித்திரங்களில் இது பிரபல்யமானது.

“வேலண்டைன்” தினம் வேலண்டைன் எனும் பாதிரியாரால் உருப்பெவெடுத்தது எனலாம்.இதை அவருக்கு நன்றி செலுத்தும் நாளாக சிலரும், ஆண் பெண்களாகிய இரு பாலாருக்கும் உரிமை பெற்றுக்கொடுப்பதற்காக தியாகம் என சிலரும் கருதுகின்றனர்.இவ்வாறு இதன் கொண்டாட்டங்களும் விழாக்கள்ளும் தேசத்துக்கு தேசம், இனத்துக்கு இனம் வேறுபடுகின்றன.

இத்தினம் ஒரு இஸ்லாமிய உள்ளத்தின் பார்வையில் இது எவ்வாறு இருக்க வேண்டும் என நோக்கும் போது.

அல்லாஹ் புனித  இஸ்லத்தினை பரிபூரணப்படுத்தி விட்டான் இதன் பின்னர் இதில் எவ்வித பிற்சேரக்கைகளுக்கும் தேவை கிடையாது.

அல்லாஹ் குறிப்பிடும் போது “இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்”. (அல் குர்ஆன் 5:3).

நபிகளார் குறிப்பிடும் போது. நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான(தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள்.அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா(ரலி),  நூல்: அஹ்மத் (16519)

இக்காதலர் தினம் மனித சமூகத்துக்கும் முஸ்லிம்களுக்கும் தேவையெனில் இஸ்லாம் முதலில் காட்டித்தந்திருக்கும்.இது இவ்வாறு காட்டித்தராத  ஒரு வழிகேடு என்றால் அது மிகையாகாது. முஸ்லிம்களுக்கு என இரு கண்ணியமான பெருநாட்களை இஸ்லாம் காட்டித்தந்துள்ளது.அவை நோன்பு மற்றும் ஈதுல் அல்ஹா எனும் இரு பெருநாட்களாகும்.இதை எவ்வாறு கொண்டாட  வேண்டும் எனவும் காட்டியுள்ளது.

காதலர் தினத்தின் அடிப்படையை பார்க்கும் போது அல்லாஹ் அல்லாத ஒரு கடவுளின் பெயரில் உருப்பெற்றது. இதன் பின்னர் ஒரு கிறிஸ்தவ மதகுருவை அடிப்படையாக  வைத்து கொண்டாடப்படுகிறது. இரு காரணங்களும் இஸ்லாம் தடுத்த காரணிகளில் சேர்கின்றன.

ஆகவே ஒரு முஸ்லிமின் வாழ்வில் இது கொண்டாடப் படக்கூடியதுமல்ல.விரும்ப படக்கூடியதுமல்ல.மாறாக  இது ஒரு சீர் கேடும் இழிவும் ஆகும் என உள்ளம் வெறுக்கும்.ஒரு கெட்ட விடயத்தை உள்ளத்தால் வெறுப்பதும் நம்பிக்கையின் ஒரு அம்சம்.

இஸ்லாம் காட்டித்தராத  அனைத்து விடயங்களும் வழிகேடாகும் அவை அல்லாஹ்விடத்தில் எவ்வித  பயனையும் பெற்றுத்தராது மாறாக  பாவத்தினையும் அழிவையும் கொண்டுவரும் என்பது திண்ணம்.ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “மார்க்கத்தில் இல்லாத  ஒன்றை ஒருவர் செய்தால்  அது ஏற்றுக் கொள்ளப்பட  மாட்டாது நிராகரிக்கப்பட்டதாகும்”.(நூல்: புகாரீ (2697).

இவ்விழா மற்றும் பண்டிகை கிறிஸ்தவர்களதும் ரோமர்களினதும் ஒரு விழாவாக  இருக்கின்றது.இவ்வாறு இதை பின்பற்றும் போது ஒரு விசுவாசியின் விசுவாசத்தில் குறைபாடுகள் உண்டு எனலாம். no_to_valentine___part_1_by_nayzak-d5uy6hg

ஏனெனில் நபிகளார் குறிப்பிடும் போது எவரேனும் இன்னொரு சமூகத்தாருக்கு ஒப்பாக நடப்பார் எனின் அவர் அச்சமுகத்தினை சேர்ந்தவராவார்.என  குறிப்பிட்டார்கள்.(நூல் அபூதாவுத், எண் :3401/3512)இவ்வாறு இதை செய்யும் போது இஸ்லாத்தில் குறையுள்ளது அல்லது இஸ்லாத்தில் இல்லாததை விட  மிகச்சிறந்தது என எண்ணத் தோன்றுகிறது.ஆகவே இதை தவிர்ப்பது விசுவாசத்தின் அடிப்படைகளில் ஒன்று.

இவ்விழாவின் நோக்கம் காதல்,காதல் பறிமாற்றம் எனும் அடிப்படைகளாகும் ஆகவே இவை மனித  இனத்தின் பேரழிவுகளை ஏற்படுத்தும் என்பதை பல காதல் தோழ்விகளும் ஏமாற்றங்களும், சீரழிவுகளும் படம் பிடித்துக்காட்டுகின்றன.

மனிதர்களுக்கிடையில் அன்பு,கருணை,இரக்கம் என்பன  காணப் படவேண்டும்.இதை இஸ்லாம் விரும்புகிறது.நபிகளார் கூறும் போது “உலகில் உள்ளவர்களுக்கு அன்பு காட்டுங்கள் வானில் உள்ளவர்கள் அன்பு காட்டுவர்” என கூறியுள்ளார்கள்.(நூற்கள் புகாரி அதபுல் முஃபிரத்,திரமிதி 87,அபூதாவுத்)

இவை இஸ்லாம் காட்டிய  பிரகாரம் இருக்கும் போது அது புனிதமானது.கண்ணியமானது சுவனத்தின் வாயில்களை அடையச்செய்யும்.மாறாக  சமூகத்தின் ஒழுக்க நெறிகளை மதிக்காது  ஆண்பெண் இருபாலாரினதும் ஒழுக்கங்களை அழித்து எதிர்காலத்தினை குட்டிச்சுவராக்கும் இத்தகைய  நெறிகெட்டவிடயங்களை தவிர்க்கும் போது மாத்திரம் தான் எதிர்கால  இளஞ்சிட்டுக்களை பாதுகாக்க முடியும் என்பது திண்ணம்.

இத்தினமானது பல்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது வாழ்த்து அட்டைகள், சிகப்பு ரோஜாரக்கள்,சிகப்பு நிற காதல் சின்னங்கள் பரிமாற்றம். கூட்டமாகவும் தனித்தனியாகவும் விழாக்கள் கலியாட்டங்கள், தியாகங்களை ஞாபகப்படுத்தல் என பல் வேறு வடிவங்களையும் நம்பிக்கைகளையும் கொண்டமைந்து காணப்படுகிறது.

இது எவ்வாறு இருப்பினும் உலகமே இணைந்து கொண்டாடினாலும் ஒரு பிழை ஒரு போதும் சரியாக முடியாது.இதன் போது ஒரு முஸ்லிமின் செயறபாடு இவ்வாறு இருக்க வேண்டும். அல்லாஹ் விசுவாசிகளின் பண்புகளை சிலாகித்து குறிப்பிடும் போது “அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்”(25:72). இத்தகைய  கேலிக்கைகளை விட்டும் ஒதுங்கி  கண்ணியமான வர்களாக  தமது இஸ்லாமிய  போதனைகளை பின்பற்றுவர்.

இத்தகைய  விழாக்கள் மூலம் இலாபத்தினை ஈட்டுபவர்கள் வர்த்தகர்களும்,பாரிய  நிறுவனங்களுமாகும்.இதில் விநியோகிகிக்கப்படும் அட்டைகள்,அன்பளிப்புகள் என்பன விலை கூடியனவாகும்.

இதை தியாகம் என பொருட்படுத்தாது அவற்றினை கொள்வனவு செய்து தமது கற்புக்களை இழக்கும் அப்பாவி சந்ததிகளை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரினதும் தலையாய  கடமை.இதையும் தாண்டி சமூக இன மத  பேதம் கடந்து கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் இத்தகைய  விழாக்களை விட்டும் சமூகத்தினை பாதுகாப்பது காலத்தின் தேவை.

-அபூ உமர் அன்வாரி BA மதனி-

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *