உணவு உண்ட பின்னர் நீங்கள் அருந்துவது! வெந்நீரா? குளிர்நீரா?

நாம் உண்ணும் உணவு சமிபாடுஅடைய உடலில் உள்ள சுரப்பிகள் சில அமிலங்களை சுரக்கின்றது. ஆதலால் உணவு உண்ட பின்னர் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம்சூடான தண்ணீர் அருந்துவதால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றதாம். சூடான தண்ணீர் அருந்துவதால் உணவானது எளிதில் சமிபாடு அடைவதோடு உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் கெட்ட கொழுப்புக்களையும் தடுக்கிறது.

எனவே சாப்பிட்டு முடித்ததும் இளம் சூடான சூப் அல்லது இளம் சூடான நீர் குடிக்கலாம் என பரிந்துரைக்கின்றனர்.

குளிர்நீர் பருகுவது உடலுக்கு எதிர்மறையான செயல்பாடுகளை ஏற்படுத்தும். நம்மில் அதிகம் பேர் சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்பதனபெட்டியில் வைத்திருக்கும் தண்ணீரையே பருகுகின்றனர்.

இது இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்நீர் குடிப்பதால், நாம் எடுத்துக்கொண்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுவதால் சாப்பிட்ட உணவு சமிபாடு ஆவதில் பிரச்சினை ஏற்படுவது மட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.

குளிர்நீர் பருகுவதை தொடர்ந்து செய்து வந்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம். இதய நோயாளிகள் சாப்பிடும்போது கண்டிப்பாக குளிர்நீர் எடுக்கக்கூடாது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares