உதவி பெரும் பயனை அளித்துள்ளது. நன்றி தெரிவிக்கும் ஆசிபா மருத்துவ நிதியம்.

கேகாலை மாவட்டத்தில் தல்கஸ்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த தோல்வியாதியினால் பாதிக்கப்பட்டிருந்த சகோதரிகளின் மாதாந்த மருத்துவத் தேவைக்காக எம்மால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று குறுகிய காலத்தில் ஏராளமானோர் நிதியுதவி செய்திருந்தனர்.

உங்களது நன்கொடைகள் தற்போது இஸ்லாமிய வங்கியில் முதலீடு செய்யப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் மாதாந்த வருமானம் இப்பிள்ளைகளின் மாதாந்த மருந்துவச் செலவுகளுக்காக வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளை ஆசிபா மருத்துவ நிதியம் தற்போது மேற்கொண்டுள்ளது. எனவே இந்த அறிவித்தலோடு இந்த சிறுமிகளுக்கான நிதி சேகரிப்பு நடவடிக்கை முடிவுக்கு வருகின்றது என்பதனை எமது நன்கொடையாளர்களுக்கு அறியத்தருகின்றோம்.

நீங்கள் வழங்கிய உதவிகள் இன்ஷா அல்லாஹ் இச்சிறுமிகளின் ஆயுட்காலம் வரை மாதாந்த மருத்துவச் செலவுகளை ஈடுசெய்வதற்கான ஒரு அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

இப்பணியில் எம்மோடு ஒத்துழைத்த உங்கள் அனைவரிற்கும் ஆசிபா மருத்துவ நிதியம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

இச்சிறுமிகளினதும் அவர்களின் பெற்றோரினதும் பிரார்த்தனைகள் என்றென்றும் உங்களுக்கு உண்டு.

எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நீண்ட ஆரோக்கியமான ஆயுளையும் உங்கள் தொழில் முயற்சிகளில் பரக்கத்தையும் தருவானாக.

நன்றி

– ஆசிபா மருத்துவ நிதியம்.- www.aashifa.org

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares