உயன்வத்தை நூராணியா முஸ்லிம் மகா வித்தியாலய பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல்

உயன்வத்தை நூராணியா முஸ்லிம் மகா வித்தியாலய பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு எதிர் வரும் நோன்புப் பெருனால் தினத்தன்று நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் மாலை 4.15க் கு பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள மேற்படி ஒன்று கூடலை நூராணியா பழைய மாணவர் சங்கம் (NOBA) ஏற்பாடு செய்துள்ளது.download (49)

அன்றைய தினம் பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாக பழைய மாணவர் சங்கத்தின் திட்டங்கள் பற்றிய விளக்கம் வருகை தரும் அதிதிகள் மற்றும் பழைய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு ஆக்கபூர்வமான ஆலோசனகள் கோரப்படும்.

பாடசாலையின் தரத்தை மேலும் மேம்படுத்த பின்வரும் ஒழுங்கமைப்பில் ஆராய உத்தேசிக்ககப்ப்பட்டுள்ளது.

1. கற்கை மேம்பாடு – ACADEMIC EXCELLENCE

2. மாணவர்களின் உள உடல் சூழல் சுகாதாரம் HEALTH & HYGIENE

3. ஆசிரியர் நலன் TEACHER EMPOWERMENT

4.மாணவர்களின் ஆளுமை வளச்சி VALUE AND PERSONALITY DEVELOPMENT

5.பாடசாலை உற்கட்டமைப்பு INFRA STRUCTURE DEVELOPMENT

எனவே மேற்படி நிகழ்வில் சகல பழைய மானவர்களும் கலந்து சிறப்பிக்குமாறு நூராணியா பழைய மாணவர் அங்கம் அன்புடன் அழைக்கிறது.

NOORANIYA

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *