உலமாக்கள் மீது வசைபாடி சாதித்துவிட்டோம் என இறுமாப்போடு இருக்கும் வாளிபார்களே… ! ஒருகணம் சிந்தியுங்கள்.

கண்ணியமிக்க உலமாக்கள் மீது வீண் பலி, அவதூறுகளை சுமத்தி வசைபாடி ஏதோ சாதித்துவிட்டோம் என இறுமாப்போடு இருக்கும் வாளிபார்களே… ! ஒருகணம் சிந்தியுங்கள்.

வாழ்கையில் சுமார் பாதிக்கு மேல் இஸ்லாமிய சட்ட அறிவை தேடுவதிலும் கற்பதிலும் செலவுசெய்த மார்க்க மேதைகள், இஸ்லாமிய சட்ட வல்லுனர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் போன்றவர்களுக்கு வழங்கவேண்டிய கண்ணியம் மரியாதை என்பவற்றை ஒதுக்கிவிட்டு ஒப்பீட்டுரீதியில் கால் சுண்டு அறிவு கூட இல்லாத சிலர் முகநூல்களிளும் இணையங்களிளும் தாம் பிரபல்யம் அடையவேண்டும் என்பதற்காக கண்ணியமிக்க உலமாக்கள் மீது பொய், வீண் பலி, அவதூறு போன்றவற்றை சுமத்தி தகாத வார்த்தைகளை பிரயோகித்து வசைபாடி கட்டுரைகளும் பின்னூட்டங்களும் எழுதி முகநூல்களிளும் இணையங்களிளும் பதிவேற்றி ஏதோ சாதித்துவிட்டோம் என இறுமாப்போடு இருக்கும் வாலிபர்களே நீங்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

அவ்வாறு முகநூல்களில் அவதூறை வாரிவீசும் அப்பாவி வாலிபர்கள் ஒருகணம் அல்லாஹ்வை பயந்துகொள்ளட்டும். புத்திஜீவிகள், அத்துறையில் பாண்டித்தியம் பெற்ற அறிஞர்கள் மார்க்க மேதைகள் மற்றும் சட்ட வல்லுனர்கள் போன்ற பல குழுக்கள், இணைந்து கலந்து ஆலோசித்து தீர விசாரித்து மசூரா எனும் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஏகோபித்த ஒருமுடிவை தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட ஒருவரை நோக்கி அவதூறுகளை வாரிவீசி வசைபாடி பல்வேறு வகையான விமர்சனங்கள் செய்வது மட்டுமல்லாமல் இணையங்களில் குறிப்பிட்ட நபரின் புகைப்படங்களை பயன்படுத்தி எதிராக கட்டுரைகளும் ஒழுங்கற்ற முறையில் பின்னூட்டங்களும் எழுதுவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. நமது மார்க்கம் நமக்கு கற்றுத்தந்த வழிமுறையும் அல்ல.

இவ்வாறு மசூராவின் ஏக ஒருமித்த ஒத்த முடிவை தனிப்பட்ட மன இச்சையின் பிரகாரம் அதை ஏற்காமல் புறந்தள்ளி நிராகரித்து தானும் இஜ்மாவை விட்டு விலகியதோடு மட்டுமல்லாமல் தான்தோன்றித்தனமாக குறிப்பிட்ட தனி நபரை தூற்றி வசைபாடிய ஒவ்வொருவரும் தான் செய்ததிட்கான கூலியை பெற்றே ஆகவேண்டும். மேலும் குறிப்பிட்ட ஒரு மனிதனின் மனதை அநியாயமாகப் புண்படுத்தி தங்களுடைய ஆகிரத்தை தாங்களே பாலாக்கி கொள்ள வேண்டாம். இது குறித்து ஒவ்வொருவரும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அவ்வாறு உண்மைக்கு புறம்பாக அவதூறு பரப்புவோர்களுக்கு எதிராக தண்டிக்க இறைவன் போதுமானவன் என்பதை ஒருகணம் சிந்தித்து தான் செய்த தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் கையேந்தி அழுது புலம்பி மன்றாடி பாவ மன்னிப்பு பெறவேண்டும்.

You may also like...

2 Responses

 1. Esteam says:

  பிழையான தகவல்களை அடிப்படையாக இது எழுதப் பட்டுள்ளது. பெருநாளை வேண்டுமென்றே பின்போடும் தீர்மானம், மசூரா முடிவு அல்ல, இரண்டு முக்கியமான நபர்களின் பிடிவாதமான முடிவினால் மேற்கொள்ளப் பட்டது என்பதனை அங்கே இருந்த ஏனைய உலமாக்களில் சிலர் வெளியில் சொல்லியுள்ளனர்.

  இதன் அடிப்படையில்தான் அமீர் ஹஜுள் அக்பர் அவர்களும் உலமா சபைத் தலைவர் பதவி விலக வேண்டும் என்று குறிப்பிட்டு கட்டுரை வெளியிட்டுள்ளார். அந்த கட்டுரையை நீங்கள் ஏன் வெளியிடவில்லை?

  மேலும், இந்த கட்டுரையை எழுதியவரின் பெயர் என்ன?

  • மாவனல்லை நியூஸ் says:

   Salam Bro. if you have the Rasheed hajjul Akbar’s Article please send us. we are ready to publish it as well. (ireport@mawanellanews.com)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares