உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள், நிர்ணயிக்கப்பட்டுள்ள விதம் குறித்த பிரச்சினைகளை அறிவிக்கவும்..!

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா நியமித்துள்ள “உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்யும் தேசிய குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் மேன் முறையீடுகளை பரிசீலிக்கும் ஐவர் அடங்கிய குழு” தனது கடமைகளை ஆரம்பித்துள்ளது.

index

இக்குழுவுக்கு நவம்பர் 1 முதல் 21 ஆம் திகதி வரை முறையீடுகளை அனுப்ப முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ள விதம் குறித்து தத்தமது பிரதேசங்களில் பிரச்சினைகள் இருப்பின் உடனடியாக மேற்படி குழுவுக்கு எழுத்து மூலமும், மின்னஞ்சல் மூலமும் அனுப்பி வைக்க முடியும். குறிப்பாக   சமூக,சமய, அரசியல் அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள் இது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மேன் முறையீடுகளை அனுப்ப வேண்டிய முகவரி.
Ministry of Local Governments and Provincial Council
No.330, Union Place, Colombo-2
Emai: appeal.dc@pclg.gov.lk

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் தொடர்பில் தகவல்கள் மற்றும் வரைபடங்கள் முதலியவற்றை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், நகர,பிரதேச சபைகள் ஆகிய இடங்களில் பார்வையிடலாம். அல்லது www.pclg.gov.lk மின்னஞ்சல் முகவரியில் பார்வையிடலாம்.
மேலதிக விபரங்கள் தேவைப்படின்:

அமைச்சின் உதவிச் செயலாளர் பியங்கா நிலவக்க ஆராச்சி
Tel: 0112454122 Fax: 0112328282/ 0112421130 அபிவிருத்தி உத்தியோகத்தர் சந்துனி ரத்னாயக்க Tel: 0112452430
Fax: 0112452430 ஆகியோருடன் தோடர்பு கொள்ளவும்.

-முஹம்மத் முஹ்ஸி-

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *