ஊவாவில் UNP,JVP முன்னேற்றம்; UPFA பின்னடைவு, ஹக்கீம், ரிஷாத் கூட்டணி தோல்வி

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஆறாவது ஊவா மாகாண சபையின் ஆட்சியை ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணி கைப்பற்றி இருந்தாலும் ஐக்கிய சுதந்திர முன்னணியின் வாக்குகள் குறைந்துள்ளதுடன் பாரிய பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன இந்த ஊவா மாகாண சபை தேர்தலில் அக்கட்சிகளின் வாக்குகளை அதிகரிதுக்கொண்டுள்ளமை குறுப்பிடத்தக்கது.

பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் தேர்தல் பெறுபேற்றின் அடிப்படையில் ஆளும் கட்சிக்கு 02 போனஸ் ஆசனங்கள் அடங்கலாக 19 ஆசனங்களும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு13 ஆசனங்களும், மக்கள் விடுதலை முன்னணிக்கு 02 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

10406758_989181664441301_958734101988223440_n

ஊவாவில் ஹக்கீம், ரிஷாத் கூட்டணி படு தோல்வி

ஊவா மாகாண சபை தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக ஐக்கிய முன்னணி (துஆ) படு தோல்வியடைந்துள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இணைத்து அமைச்சர் ஹாபீஸ் நஸீர் தலைமையில் கூட்டணியாக ஊவா மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டது.

hakeem-and-rishad

என்றாலும் ஜனநாயக ஐக்கிய முன்னணியால் எந்தவொரு ஆசனத்தையும் கைப்பற்ற முடியவில்லை. பதுளை மாவட்டத்தில் இவர்களால் 5,045 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

பதுளை மாவட்ட தேர்தல் முடிவுகள்

பரணகம தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 19,127 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 18,930
மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி – 2, 545
ஜனநாயகக் கட்சி – 556
தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு – 307

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 44,705
செல்லுபடியானவை – 42,682
நிராகரிக்கப்பட்டவை – 2,023

அப்புத்தளை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 21,637 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 19,297
மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி – 1,261

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 46,305
செல்லுபடியானவை – 43,609
நிராகரிக்கப்பட்டவை – 2,696

பதுளை தொகுதி

ஐக்கிய தேசியக் கட்சி – 21,099 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 15,001
மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி – 2,271
ஜனநாயகக் கட்சி – 199
தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு – 336

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 40,414
செல்லுபடியானவை – 39,070
நிராகரிக்கப்பட்டவை – 1,344

வெலிமடை தொகுதி

ஐக்கிய தேசியக் கட்சி – 23,046 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 22,311
மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி – 2,485

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 53,481
செல்லுபடியானவை – 51,387
நிராகரிக்கப்பட்டவை – 2,094

மகியங்கனை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 32,863
ஐக்கிய தேசிய கட்சி – 25,656
மக்கள் விடுதலை முன்னணி – 3,976

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 67,346
செல்லுபடியானவை – 64,897
நிராகரிக்கப்பட்டவை – 2,449

வியலுவ தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 17,650
ஐக்கிய தேசிய கட்சி – 14,695
மக்கள் விடுதலை முன்னணி – 958

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 35,999
செல்லுபடியானவை – 33,965
நிராகரிக்கப்பட்டவை – 2,034

பசறை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 23,188
ஐக்கிய தேசிய கட்சி – 16,426
மக்கள் விடுதலை முன்னணி – 800

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 44,050
செல்லுபடியானவை – 41,267
நிராகரிக்கப்பட்டவை – 2,783

ஹாலி – எல தொகுதி

ஐக்கிய தேசியக் கட்சி – 23,900 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 21,104
மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி – 1,942

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 50,451
செல்லுபடியானவை – 47,705
நிராகரிக்கப்பட்டவை – 2,746

பண்டாரவளை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 27,365
ஐக்கிய தேசிய கட்சி – 27,085
மக்கள் விடுதலை முன்னணி – 2,300

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 60,540
செல்லுபடியானவை – 57,850
நிராகரிக்கப்பட்டவை – 2,690

தபால் மூல வாக்களிப்பு முடிவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 8,810
ஐக்கிய தேசிய கட்சி – 7,274
மக்கள் விடுதலை முன்னணி – 2,087

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 19,478
செல்லுபடியானவை – 18,939
நிராகரிக்கப்பட்டவை – 539

மொனராகல மாவட்ட தேர்தல் முடிவுகள்

மொனராகல தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 44,921
ஐக்கிய தேசிய கட்சி – 22,456
மக்கள் விடுதலை முன்னணி – 3,293

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 76,586
செல்லுபடியானவை – 72,173
நிராகரிக்கப்பட்டவை – 4,413

பிபிலை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 33,307 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 16,229
மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி – 2,967

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 57,208
செல்லுபடியானவை – 54,072
நிராகரிக்கப்பட்டவை – 3,136

வெல்லவாய தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 56,990 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 35,580
மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி – 8,704

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 110,143
செல்லுபடியானவை -105,145
நிராகரிக்கப்பட்டவை – 4998

தபால் மூல வாக்களிப்பு முடிவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 5,632 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 2,800
மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி – 1,001

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 10,306
செல்லுபடியானவை -10,036
நிராகரிக்கப்பட்டவை – 324

பதுளை மாவட்ட இறுதி முடிவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 209056 – ஆசனங்கள் -09

ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 197708 – ஆசனங்கள் -08

மக்கள் விடுதலை முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 20625 – ஆசனங்கள் -01

மொனராகல மாவட்ட இறுதி முடிவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 140,850 – ஆசனங்கள் -08

ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 77,065 – ஆசனங்கள் -05

மக்கள் விடுதலை முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 15965 – ஆசனங்கள் -01

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *