எச்சரிக்கை ! குணப்படுத்த முடியாத ஒருவித தோல் நோய் பரவுகிறது

இலகுவில் குணப்படுத்த முடியாத நோய்த்தாக்கம் தற்பொழுது நாடளாவிய ரீதியில் பரவ ஆரம்பித்துள்ளதாக, பேராதனை பல்கலைக்கழக மருத்துவபீட பேராசிரியர் எஸ்.ஏ.எம் குலரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், லீஸ் – மெனய்சிஸ் எனப்படும் குறித்த தோல் தொடர்பான நோயைக் குணப்படுத்த, நீண்ட நாட்களாகும் என்றும் தெரிவித்துள்ள அவர், இலங்கையில் தற்பொழுது அதிகமாக இந்நோய் பரவி வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பூச்சிகளால் பரவும் இந்த தோல் நோய், இந்தியாவில் பொதுவாக காணக்கூடியதாக உள்ளதாகவும் , சமீப காலங்களில் இதன் வளர்ச்சி இலங்கையிலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares