எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்ற ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

800_mg_1419-edit

ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றவர்கள் ஆசிரியர்கள்.

உலகிலேயே அல்லாஹ்விற்கு மிக நெருக்கமான மனிதர்கள் நபிமார்களே. நபிமார்கள் அனைவர்களும் செய்த ஒரே பணி கற்பித்தலே. கற்பித்தல் என்பது அல்லாஹ்வால் அவனது தூதர்கள் மீதும் அவர்களுக்குப் பின்னர் வருகின்ற அறிஞர்கள், புத்திஜீவிகள் அனைவர்கள் மீதும் சுமத்தப்பட்ட ஒரு மிகப்பெரும் அமானிதமாகும்.

அந்தவகையில் ஆசிரியர்கள் என்பவர்கள் மிகப்பெரும் அமானிதத்தைச் சுமந்தவர்கள். ஒரு தந்தைக்கும், தாய்க்கும் பிறகு ஒரு பிள்ளையை செப்பனிடும் பெறுப்பு ஆசிரியர்களிடமே ஒப்படைக்கப்படுகின்றது.

நபிமார்களின் பணியை அமானிதமாக சுமந்துள்ள ஆசிரியர்களை நாம் எப்போதும் மதித்து நடக்க வேண்டும். அதனையே இஸ்லாம் நமக்கு வழிகாட்டியுள்ளது.

மாணவ சமூகத்தின் மத்தியில் குறிக்கோள், இலட்சியம் எதிர்காலம் என்பவற்ரை நன்கு பதிய வைத்து மாணவர்களை சீரிய வழியில் வழிநடத்துவதில் ஆசிரியர்களின் பங்கு விசாலமானவை.

அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள் என்றே கூறவேண்டும்..

உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் வார்த்தைக்கு வார்த்தை எதிர்ப்பதம் உண்டு. ஆனால் ஆசான் என்ற ஒரு வார்த்தைக்கு இலக்கண வித்தகர்கள் எதிர்மறை வார்த்தை தரவில்லை.

ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில் தீர்மானிக்கப் படுகிறது என்பது நூறு சதவீதம் உண்மை. தாய் தந்தையை விட, ஆசிரியரிடம் தான் ஒரு குழந்தை அதிக நேரம் செலவழிக்கிறது.

இன்று பெரும்பாலான நாடுகள் ஆசிரியர் தினத்தை உலகில் கொண்டாடுகின்றன. ஆசிரியர் தினம் என்பது பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும்.

ஒரு சமூகம், அதி உன்னத நிலை அடைந்து இருந்தால், நிச்சயமாக அதன் பின்னால் ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால், ஆசிரியர் சமூகம், தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம்.

வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம்.

மாணவனுக்கு ஞானத்தின் சுடரை ஏற்றுகிற பணி ஆசிரியருடையது. அவர்களை நன்றியுடன் நினைவு கூறவும், அவர்களின் பணி தொடர மாவனல்லை நியூஸ் வாழ்த்துகின்றது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares