எனது உயிர் இருக்கும் வரை மாவனல்லையில் மீண்டும் ஒரு கலவரம் ஏற்பட இடமளிக்கமாட்டேன்

ஹெம்மாதகமை கபுராக்க விஹாரையின் தலைமை பிக்கு சங்கைக்குரிய ரந்திலிகம ரத்னஜோதி தேரரின் இறுதிக் கிரியை நேற்று (31) ஹெம்மாதகமையில் இடம்பெற்றது.

கடந்த மார்ச் 27 ஆம் திகதி இறையடி எய்திய ரந்திலிகம ரத்னஜோதி தேரர் இன நல்லுறவுக்கான சிறந்ததொரு முன்மாதிரியாக அடையாளம் காணப்பட்ட ஒருவராவர். இறக்கும் போது அவர்க்கு வயது 59.

ஹெம்மாதகமை முஸ்லிம் பௌத்த நற்புறவு சங்கத்தின் ஆரம்பகர்தாவாகவும், தலைவராகவும், கடமையாற்றிய சங்கைக்குரிய ரந்திலிகம ரத்னஜோதி தேரர், கடத்த 2001 ஆம் ஆண்டு மாவனல்லையில் இடம்பெற்ற இனக் கலவரத்தின் போது இன நல்லுறவுக்காக முன்னின்று செயற்பட்ட ஒருவர். அதேபோன்று தனது உயிர் இருக்கும் வரை மாவனல்லை பிரதேசத்தில் மீண்டும் ஒரு இனக் கலவரம் ஏற்பட இடமளிக்கமாட்டேன் என வாக்குறுதி ஒன்றையும் வழங்கியிருந்தார்.

இவரது இழப்பு இன நல்லிணக்கத்தை விரும்பும் அனைவருக்கும் பேரிழப்பாக காணப்படும் அதேவேளை மாவனல்லை, ஹெம்மாதகமை பிரதேசத்தை சேர்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதேவேளை குறித்த தேரரின் இறுதிக் கிரிகையில் பெரும் தொகையாக முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டதோடு, இறுதிக் கிரியை நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்குமான பகல் போசனத்தை ஹெம்மாதகமை பள்ளிவாயல்களின் சம்மேளனம் அனுசரணையில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சங்கைக்குரிய ரந்திலிகம ரத்னஜோதி தேரரின் இறுதிக் கிரிகைகளில் பிரதமர் தி.மு ஜயரத்ன, சிரேஷ்ட அமைச்சர் அதாவுட செனவிரத்ன, சுகாதார பதில் அமைச்சர் லலித் திசாநாயக்க மற்றும் மாவனல்லை பிரதேச சபை தலைவர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

3 4-1 download (4) images (6) images (7) images (8) images (9)

10

9

8

7

6

5

4

3

2

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *