எமது செய்தியின் விளைவாக, சாஹிரா கல்லூரி OBA யின் பொதுக் கூட்டம் எதிர்வரும் 26ம் திகதி

மாவனல்லை நியூஸ் கடந்த பெப்ரவரி மாதம் மாவனல்லை சாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் இறுதியாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகக் குழுவின் காலம் நிறைவடைந்து ஒன்பது (9) மாதங்கள் கடந்துள்ளதகவும் உடனடியாக பழைய மாணவர் சங்கத்தின் பொதுக் கூட்டம் நடாத்தப்பட வேண்டும் என்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அது தொடர்பான செய்திக்கு :- சாஹிரா கல்லூரி OBA யின் பொதுக் கூட்டம் தாமதம் ஆவது ஏன்?

அதன் விளைவாக மாவனல்லை சாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பொதுக் கூட்டம் எதிர்வரும் 26ம் திகதி ஞாயற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கல்லலூரி கேட்போர்கூடத்தில் இடம்பெற உள்ளதாக கல்லலூரி அதிபர் K.M Foumy அவர்கள் தெரிவித்தார்.

மேலும் இந்த பழைய மாணவர் சங்கத்தின் பொதுக் கூட்டத்தில் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதால் சாஹிரா கல்லூரி பழைய மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் அதிபர் அவர்கள் வேண்டிகொள்கின்றார்.

11137099_1055231981171090_8190978990186465597_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *