ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளராக கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசிம் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐதேக செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (08) மாலை இடம்பெற்ற ஐதேக தலைமைத்துவ சபைக் கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.