ஐதேக தீர்மானம் மிக்க செயற்குழு கூட்டம் இன்று

தீர்மானம் மிக்கதாக அமையவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (23) நடைபெறவுள்ளது.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய எழுச்சியை கண்டதை அடுத்து முதலாவது செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமாக சிறிகொத்தவில் இன்று மாலை இக்கூட்டம் நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கட்சியின் சிரேஸ்ட உப தலைவராக மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் கட்சியின் பொருளாளராக தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு பதுளையில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரேன் பெனாண்டோவுக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சிக்காக அவர் செய்த அர்ப்பணிப்பை கௌரவப்படுத்தும் வகையில் ஹரேன் பெனாண்டோவுக்கு முக்கிய பதவி வழங்கப்படவுள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

united-national-party-unp-sri-lanka

එක්සත් ජාතික පක්ෂයේ කෘත්‍යාධිකාරී මණ්ඩලය අද(23) පස්වරුවේ රැස්වීමට නියමිතව තිබේ.

ඌව පළාත් සභා මැතිවරණයෙන් අනතුරුව කෘත්‍යාධිකාරී මණ්ඩලය රැස්වන පළමු අවස්ථාව මෙය වෙයි.

එක්සත් ජාතික පක්ෂයේ ජාතික නායක රනිල් වික්‍රමසිංහ මහතාගේ ප්‍රධානත්වයෙන් සිරිකොත පක්ෂ මූලස්ථානයේ දී අද පස්වරුවේ කෘත්‍යාධිකාරි මණ්ඩලය රැස්වීමට නියමිතය.

මෙවර කෘත්‍යාධිකාරී මණ්ඩල රැස්වීමේ දී එක්සත් ජාතික පක්ෂයේ තනතුරු කිහිපයක වෙනස්කම් සිදුවනු ඇති බව වාර්තා වුණි.

ඒ අනුව එක්සත් ජාතික පක්ෂයේ නියෝජ්‍ය නායක ධූරය සඳහා සජිත් ප්‍රේමදාස මහතා, පක්ෂයේ ජ්‍යෙෂ්ඨ උප සභාපතිවරයා ලෙස රංජිත් මද්දුම බණ්ඩාර මහතා සහ භාණ්ඩාගාරික ලෙස එරාන් වික්‍රමරත්න මහතා පත්කිරීම එහිදි සිදුවනු ඇත.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *