ஒபாமாவின் டுவிட்டர் – பேஸ்புக் பக்கங்களை முடக்கிய சிரிய

அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபா­மாவின் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்­கங்­களை சிரிய ஜனா­தி­பதி  பஷர் அல் அஸாத்தின் ஆத­ர­வா­ளர்கள் நேற்று முன்­தினம்  பல மணி நேரத்­திற்கு முடக்கி வைத்­தனர். இந்த பக்­கங்­களை பார்­வை­யி­டு­வ­தற்­காக இணைப்­பு­களை கிளிக் செய்த நபர்கள், சிரி­யாவின் மின்­னணு இரா­ணுவம் என்ற இணைய இணைப்­புக்கு திசை திருப்­பப்­பட்­டனர்.

அவர்கள் சிரி­யாவின் மின்­னணு இரா­ணுவம் என்ற இணை­ய­த­ளத்­திற்க்கு அழைத்து செல்­லப்­பட்­டனர். அதில், ‘உங்கள் நுழை­கைக்கு நன்றி! ஒபா­மாவின் அபா­ய­க­ர­மான பிர­சார இணைப்­பு­களை நாங்கள் முடக்­கி­யுள்ளோம்’ என்ற அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

சில மணி நேரங்­க­ளுக்கு இந்த இணைப்­புகள் முடக்­கப்­பட்­ட­தாக வெள்ளை மாளிகை அதி­கா­ரி­களும் ஒப்புக் கொண்­டுள்­ளனர்.

விஷ­மிகள் சிலர் ஜனா­தி­ப­தியின் இணைப்­பு­களை முடக்­கி­யுள்­ளனர். எனினும், இவற்றை நிர்­வ­கிக்கும் கட்டுப்பாடு அவர்­களின் கைக­ளுக்கு போக­வில்லை. முடக்­கப்­பட்ட இணைப்­பு­களை புனர­மைக்கும் பணிகள் நடை­பெற்று வரு­கி­ன்றன என அவர்கள் தெரி­வித்­தனர்.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares