ஒரே பாடசாலையில் 10 வருடங்களுக்கு மேல் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் (Transfer)

ஒரே பாடசாலையில் 10 வருடங்களுக்கதிகமாக சேவையாற்றும் சுமார் 10,000 ஆசிரியர்கள் தேசிய பாடசாலைகளில் சேவையாற்றுவதாக கல்வியமைச்சின் புதிய புள்ளிவிபரங்கள் தெரியப்படுத்தியுள்ளன.

அடுத்த வருடத்திலிருந்து இந்த ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கு கல்வியமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

தேசிய பாடசாலைகளில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களின் தொகை சுமார் 30,000 ஆகும். இவற்றில் மூன்றில் ஒரு பகுதியினர் 10 வருடங்களுக்கதிகமாக ஒரு பாடசாலையில் சேவையாற்றுவதால் அப்பாடசாலைகளின் நிர்வாகத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் இவர்களை இடமாற்றம் செய்வது அவசியம் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளதுடன் குறித்த ஆசிரியர்கள் 10,000 பேரில் ஒரே பாடசாலையில் 25 வருடங்களுக்கு அதிக சேவைக்காலம் கொண்ட ஆசிரியர்களே அதிகம் காணப்படுவதாக கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares