ஒழுங்கற்ற முறையில் நியமிக்கப்பட்டவர்களை உடனடியாக நீக்கவும் – ஆசிரியர் சங்கம்

ஒழுங்கற்ற முறையில் நியமிக்கப்பட்டவர்களை உடனடியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
2305079ctu3
கல்வி நிர்வாக புதிய யாப்பிற்கு அமைவாக அந்தப் பதவிக்கு புதியவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

போட்டிப் பரீட்சைக்கு தோற்றி அதில் சித்தியடைந்தவர்கள் மாத்திரமே கல்வி நிர்வாக பிரிவில் பதவி வகிக்க முடியுமானவர்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த அரசாங்கத்தினால் ஒழுங்கற்ற முறையில் இணைத்துக் கொள்ளப்பட்ட அரசியல் உறவினர்களுக்கு அந்த நியமனங்களை வழங்க தற்போதைய அரசு நடவடிக்கை எடுப்பதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *