கஞ்சா வைத்திருந்த முன்னாள் அரணாயக்க பிரதேச சபை உறுப்பினர் கைது

download

கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக அரணாயக்க பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் உறுப்பினர் ஸடார்லின் திலக்கரட்ன மற்றும் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சபரகமுவ மாகாண ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேச சபை உறுப்பினரின் அரணாயக்க – பெஹெனியபத்தரவில் அமைந்துள்ள அவரது வீட்டில் இருந்து 500 கிராம் கஞ்சா காவற்துறையினர் கைப்பற்றியுள்ளதாக அரணாயக்க காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த நபர் இதற்கு முதலும் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று மாவனெல்லை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *