கடுகன்னாவ பொலிஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்ட கைதி வைத்தியசாலையில்

பிலிமத்தலாவ – வடிக்பொல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையிட்டமை தொடர்பில் குறித்த சந்தேகநபர் கடுகன்னாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அதன்போது பொலிஸ் நிலையத்தில் வைத்து அவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதல் சம்பவம் குறித்து கண்டி மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சந்தேகநபர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares